Tuesday, July 25, 2006

166. சாதிகள் இருக்குதடி பாப்பா..3

இட ஒதுக்கீட்டுக்காகப் போராடும் மக்கள் எப்படிப்பட்டவர்களை எதிர்த்து போராட வேண்டியதுள்ளது என்ற நிலைப்பாட்டினை புரிந்துகொள்ள இக்கட்டுரை சிறிதாவது உதவும் என்ற நம்பிக்கையில்…



‘சாதிகள் இருக்குதடி பாப்பா’ என்ற இந்தத் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஒன்று ஜூலை மாத “திசைகள்” இணைய இதழில் வெளி வந்துள்ளது. அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களில் அதனைத் தொடர்ந்த விவாதங்கள் இடம் பெற்றுள்ளன.

மீண்டும் மீள்பதிவாக அதன் ஒரிஜினல் வடிவில் பின்பு தருவதாக நினைத்துள்ளேன். ஆயினும் அதற்கு முன்பாக முக்கியமாக உங்களைச் சேரவேண்டுமாய் நான் நினைப்பதைத் தனித்தனிப் பதிவாக பதிக்க எண்ணி, அதன் இரண்டாம் பதிவாக அக்கட்டுரையின் 5-ம் பகுதியைச் சில கூடுதல்களோடு இங்கு தருகிறேன்.



V. ஐந்தாம் பகுதி

தற்போதைய நிலை:




நம் அரசுகள் பார்க்காத போராட்டங்களா? நினைத்திருந்தால் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இந்த ‘விளக்குமாறு போராட்டங்களை’ எளிதில் முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும். மனமிருந்தால் வழியிருந்திருக்கும். அதை விட்டு விட்டு, கண்காணிப்புக் குழு, அறிஞர் குழு என்றெல்லாம் அமைப்பது நமது நாட்டு அரசியல்வாதிகள் ஒரு முடிவுக்கும் வராமல் ஒரு விஷயத்தை இழுத்தடித்து, பிரச்சனையையே மக்களை மறக்க வைக்கும் ஒரு டெக்னிக்தானே!
இப்போதே பல உயர் கல்வி நிலையங்களில் நுழைவுத் தேர்வு முடிந்து விட்டது என்ற காரணம் சொல்லி 2006-2007-ல் இட ஒதுக்கீடு இல்லையென்றாகி விட்டது.அடுத்த ஆண்டுக்கு இன்னும் எத்தனை எத்தனை நொண்டிச் சாக்குகளோ?

அதோடு முற்படுத்திக் கொண்டோரிடமிருந்து பிறந்து அரசால் தத்து எடுத்துக் கொள்ளப் பட்டுள்ள இன்னொரு ‘பரிந்துரைப்பு’ - உயர்கல்வி நிலையங்களில் உள்ள மாணவர் எண்ணிக்கையை அதிகப் படுத்துவது. சும்மா சொல்லக் கூடாது - இது ஒரு நல்ல ராஜதந்திரம். கீழ்க்கண்ட கணக்கு அதைத் தெளிவுபடுத்தும்.
தற்போது I.I.T.களில் உள்ள மொத்த இடங்கள் : 4000
54% இட அதிகரிப்பில் கூடும் இடங்கள் : 2160
ஆக மொத்த இடங்கள் : 6160
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (4000ல் 27%) : 1080
தாழ்த்தப்பட்டவர்களுக்கு - SC (4000ல் 15%) : 600
தாழ்த்தப்பட்டவர்களுக்கு - ST (4000ல் 7.5%) : 300
B.C. + S.C. + S.T. 27%+15%+7.5%) : 1980

- இது மொத்த 6160 இடங்களில் வெறும் 32%.

அதாவது ஏற்கெனவே உள்ள 49.5% யை வெறும் 32% ஆக மாற்றும் நல்ல ராஜதந்திரம். மீதியுள்ள 68% (51%க்குப் பதிலாக) விளக்குமாறு போராட்டக்காரர்களுக்கு! இது மட்டுமின்றி இப்படி 54 விழுக்காடு சீட்டுகளை அதிகப்படுத்துவதற்காக மத்திய அரசு பல நூறு கோடி ரூபாய் செலவழிக்கவேண்டும்; ஆகவே, இதுபோல் சீட்டுகளை அதிகமாக்கத் தேவையில்லை; அதனால், இந்த உயர் கல்வி நிறுவனங்கள் இப்போது உள்ளதுபோலவே தொடரவேண்டும் என்பது விளக்குமாற்றுப் போராட்டக்காரர்களின் இன்னொரு விவாதம். இந்தக் கருத்தையே, India Today தன் ஜுலைமாத இதழில் cover story-யாக எழுதியுள்ளது.

ஏன், அதற்குப் பதிலாக இப்போது இருக்கும் சீட்டுக்களை இட ஒதுக்கீட்டின் கீழ் கொண்டுவந்தால் மட்டும் போதும் என்ற முடிவைக்கூட எடுக்கலாமே! எதையாவது சொல்லி, செய்து “தரமற்ற” மற்றவர் யாரும் தங்கள் “சாம்ராஜ்ஜிய எல்கைகளுக்குள்” வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணமே இவ்வளவுக்கும் காரணம்.

நம்ப முடிகிறதா…??

மேலே சொன்ன ராஜதந்திரம் போன்ற திறமைகளுக்குப் பஞ்சமேயில்லை நம் விளக்குமாறு போராட்டக்காரர்களுக்கு! இதை விடவும் சட்டத்தை எப்படி தைரியமாக, தந்திரமாக, வெளியே தெரியாதபடி (கமுக்கமாக) தங்களுக்குச் சாதகமாக முறியடிக்கும் trickery-யை இன்னொரு உதாரணம் மூலம் பார்க்கிறீர்களா? இதோ அந்தச் சாதனை……..

I.A.S., I.P.S. என்பதற்கான UPSC தேர்வுகள் எந்தக் குழறுபடி இல்லாமல், ஊழல் இல்லாமல் மிகச் சரியாக சிறப்பாக நடந்து வருவதாகத்தான் நானும் பலரைப்போல் நினைத்திருந்தேன் - இந்த வழக்கைப் பற்றிக் கேள்விப்படும்வரை.

Prelims, Mains தேர்வுகளில் வெற்றி பெற்று அதன் பின் நடக்கும் நேர்முகத்தேர்வில் பெறும் மொத்த மதிப்பெண்களை வைத்து rank செய்யப் பட்டு அதில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை OC (open competition) -ல் சாதி எதுவும் பார்க்காது தேர்ந்தெடுக்க வேண்டும். OC quota முடிந்தபின் B.C., S.C., S.T. என்ற சாதிவாரியான மாணவர்களை அவர்களது rankபடி தேர்ந்தெடுக்க வேண்டும்.இதுவே முறை. ஆனால் எத்தனை ஆண்டுகளாகவோ தெரியாது; என்ன நடந்திருக்கிறது என்றால் O.C. என்றால் (F.C. என்ற கணக்கில்) அது முற்படுத்திக் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே உரியது போல், top rankers-ல் உள்ள Forward Community மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டு, மற்ற சாதி அடிப்படையான இடங்களுக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மாணவர்களிலிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். They were hoodwinking everybody and kept their portal safe and secure. இதனால் பிறபடுத்தப் பட்டோர் 25%க்கு மேலும், தாழ்த்தப்பட்டோர் மொத்தமே 18%க்கு மேலும் வரமுடியாது. இது ஒரு பயங்கர மோசடி.
கதைபோல் தெரிகிறதா? எனக்கும் அப்படியே தோன்றியது. எப்படி இப்படிப்பட்ட உயர் அமைப்புகளில் விதிகளை இந்த அளவு மீறி (trickery and violation of law) தைரியமாக மிக மிக அநியாயமான ஒரு செயலைச் செய்திருக்க முடியும் எனபது ஆச்சரியமாகவும் கவலைக்குறிய ஒன்றாகவும் இருக்கிறது. எத்தனை பேரின் கூட்டில் இந்தச் சதி நடந்திருக்க முடியும்? இதை எப்போது நம்ப முடிந்தது என்றால்…

நம்பித்தான் ஆகவேண்டும்…!!

க்ளீட்டஸ் என்பவர் UPSC தேர்வுகள் எழுதி GRADE I Officer ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், நடந்தவைகளை வைத்து CAT -Central Administration Tribunal -க்கு ஒரு Original Application ( O.A. - this is equivalent to writ petition ) கொடுத்தார். அஜ்மல்கான் என்ற வழக்கறிஞர் இதை க்ளீட்டஸுக்காக வாதாடினார். நீதிபதி திருமதி பத்மினி ஜேசுதுரை இவ்வழக்கில் UPSCக்கு எதிரான தீர்ப்பளித்தார். இதன் பிறகு விதிகள் கடைப்பிடிக்கப் படுகின்றன என நம்பப் படுகிறது. இது எப்படிப்பட்ட வடிகட்டிய அநியாயம் என்பதை இந்த வழக்கைப் பற்றி அறிந்த போது உணர்ந்தேன். ஆனால் இப்படி ‘வடிகட்டிய’ போதும் வெற்றி பெற்ற B.C., S.C., S.T.மாணவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவ்வளவு தடைகளையும் மீறி அவர்கள் பெற்ற வெற்றி அவர்களின் தகுதியின் தரம் பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெளிவாக்குகிறது.

இப்படி நான் ‘திசைகளில்’ எழுதியபோது ரவி சிரினிவாஸ் என்ற பதிவர் ஒருவர் கீழ்க்கண்ட விளக்கம் - UPSC தேர்வுகள் எவ்வளவு சரியாக நடந்து வருகின்றன என்பதைக் காட்ட - ஒரு statistical data ஒன்றைக் கொடுத்தார். ஆனால், அந்த statistical dataவே ஒரு தவறான தகவல்; யாரை ஏமாற்ற இப்படி ஒரு தகவலை அளித்துள்ளார்கள் என்ற என் கேள்வியை அவர்முன் வைத்தேன். அந்தக் கேள்வி பதில்கள் இங்கே:

ravi srinivas said…
http://upsc.gov.in/general/civil.htm#CS (Main)
Statistical Data - CS (Main)

Year Of Exam Vacancies Candidates Recommended
SC ST OBC GEN TOTAL SC ST OBC GEN TOTAL
1995 98 49 165 333 645 101 49 192 303 645
1996 125 57 174 383 739 138 59 212 330 739
1997 89 43 166 323 621 94 46 215 266 621
1998 53 28 114 275 470 60 30 142 238 470
1999 53 27 97 234 411 63 30 127 191 411
2000 54 29 100 244 427 58 34 128 207 427
2001 47 39 97 234 417 52 42 131 192 417
2002 38 22 88 162 310 38 22 88 138 286



This is the information from UPSC website.Please compare the % of OBCS with what he has written.27% quota is filled and OBCs get more
than 27%.In other words OBCs get selected in general or open quota
also.I wont be surprised if Dharumi comes up another cock
and bull story to justify what
he written.That is his wont.

என் பதில்:


//OBC Quota is 27%// - Accepts r.s.
The following is just a part of the table provided by r.s.. I have taken OBC and the total vacancies and I have worked out the percentage.

year OBC TOTAL %
1995 165 645 25.5
1996 174 739 23.5
1997 166 621 26.7
1998 114 470 24.3
1999 97 411 23.6
2000 100 427 23.4
2001 97 417 23.3
2002 88 310 28.4

How come UPSC had it always less than 27% except for 2002?
How come it swings only between 23-24% mostly?
MAY I HAVE YOUR ANSWER
SPECIFICALLY FOR THIS, MR. R.S?
———————————–

The % of ‘candidates recommended’ goes like this with the concerened years in brackets: 27.9%(1995); 28.6(1996); 34.6% (1997 & 98); 30%(1999); 31% (2000 &2001); 30% (2002).
Just 3% OBC candidates have found place in GEN Quota.
Mathematically it shows that top ranking OBCs have been added in the GEN. But is it justifiable to argue that only 3% OBC candidates stood at par with the GEN category and still claim that top OBCs were included in the GEN category. This is what I called hoodwinking.

============================================================

திசைகள் கட்டுரை மறுபடியும் தொடர்கிறது:

ஆனாலும் இப்போதும் இன்னொரு தடைக்கல் இருப்பதாக நண்பர்கள் மூலமாக அறிகிறேன்: Prelims, Mains - இவைகளில் தேர்வு பெற்று நேர்முகத் தேர்வுக்குப் போகும்போது மாணவர்களை random-ஆக interview boards-ல் ஏதாவது ஒன்றிற்கு அனுப்புவதே சரி. அவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அவர்களது சாதி பற்றிய விவரங்கள் ஏதுமின்றி நேர்முகத் தேர்விலும் அவர்கள் மதிப்பிடப்பட வேண்டும் என்பதே சரி.Prelims, Mainsதேர்வுகளில் மாணவர்களின் தனி அடையாளங்கள் எப்படி திருத்துபவர்களுக்குத் தெரியாதோ அதே போலத்தானே நேர்முகத் தேர்விலும் இருக்க வேண்டும். pedagogical principlesகளில் ‘halo effect’ என்று ஒன்று சொல்வார்கள். மாணவனைப் பற்றிய எவ்வித முன்முடிவுமின்றி அவனது தேர்வுத்தாள் திருத்தப்பட வேண்டும்; இல்லையெனில் மனித மனம் முதலில் மாணவன் மீது திருத்துபவர் கொண்ட முடிவின்படி மதிப்பீடு செய்யும் தன்மை கொண்டதே என்பது இந்த ‘halo effect’ .
UPSC நேர்முகத் தேர்வுகளில் முதலில் OC. மாணவர்கள் தொடர்ந்து அனுப்பப் பட்டு அதன் பின் ..B.C.,… S.C….. S.T….என்று சாதி வாரியாக வரிசைப்படுத்தப்பட்டே அனுப்பப் படுகிறார்களாம். தேர்வாளர்களாக இருப்பவர்களில் இன்றைய நிலையில் யார் பெருவாரியாக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன? இம்முறையினால் நேர்முகத் தேர்வுகள் ‘halo effect’ இல்லாமல் நேர்மையாக இருக்குமா என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

இப்படி நான் எழுதியதும் மறுபடி சிரினிவாஸ்:
//இட ஒதுக்கீடு எப்படி அமுல் செய்யப்பட வேண்டும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு எப்படி தரப்பட வேண்டும் என்பதற்கான தெளிவான,விரிவான விதிமுறைகள் உள்ளன. தருமி இந்தப் பிண்ணனித் தகவலை தரவேயில்லை.மாறாக ஊர்ஜிதப்படுத்தபடாத செய்திகளை ஆதாரமாகக் கொண்டு எழுதியிருக்கிறார்.// என்றார்.
நான் கேள்விப்பட்டதை வைத்தே இந்தக் குற்ற༯p>







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Jul 25 2006 03:27 pm Uncategorized
22 Responses
ravisrinivas Says:
July 25th, 2006 at 5:27 pm
For Dharumi:
” நீங்கள் என் மீது ஒரு வழக்குப் பதிவதாகச் சொல்லியிருக்கிறீர்களே;”

Where and when.Have I written so,
anywhere?. If so please give evidence.

You are YET to reply to this. If there is any evidence to support your claim place it.

aathirai Says:
July 25th, 2006 at 6:14 pm
4000ல் 27%) : 1080

indha kanakku thavaru. motha idangalil irundhudhan
kanakkida vendum

தருமி Says:
July 25th, 2006 at 8:58 pm
ravi
better read the last para of your very first comment for this article in ‘Thisaigal’.

in case you think you can side track this article by harping about this i am not in a mood to entertain you here further.

IF YOU HAVE ANY ANSWERS AT ALL TO MY QUESTIONS GIVE THEM; else “do the needful” and keep away.

தருமி Says:
July 25th, 2006 at 9:48 pm
ஆதிரை,
//motha idangalil irundhudhan kanakkida vendum //
அப்படி பண்ணினால் அதில் முற்படுத்திக்கொண்டவர்களுக்கு என்ன நன்மை? ஆகவே தான் 4000ல் 27%) : 1080 என்ற இந்த ஏற்பாடு.

aathirai Says:
July 25th, 2006 at 10:03 pm
4000 க்கு 27 சதவிகிதம் என்று எங்கு படித்தீர்கள்? மொத்த இடங்களில்
27 சதவிகிதம் என்பது தான் சட்டமாக இருக்க முடியும். 2005 ஆம் வருடம்
இருந்த இடங்களில் 27 சதவிகிதம் என்று சட்டம் எழுதமுடியாது.

தருமி Says:
July 25th, 2006 at 10:36 pm
//…சட்டமாக இருக்க முடியும்….சட்டம் எழுதமுடியாது//
முழுக்கட்டுரையையும் படித்து விட்டீர்களா? சட்டங்கள் எப்படி முறியடிக்கப்பட்டுள்ளன என்று சொல்லிய பிறகும் உங்கள் கேள்விகள் உங்களுக்கே சரியாகத் தோன்றுகின்றனவா?

நான் எழுதியது ஒன்றும் என் சொந்தக் கற்பனையல்ல. OBC-க்கு கொடுக்கும் ஒதுக்கீட்டால் எங்களுக்கு நஷ்டம் வருமே என்ற போது இந்த திட்டம் ஒரு possibility ஆகச் சொல்லப்பட்டுள்ளது. இதன்மூலம் ‘விளக்குமாறு போராளிகளுக்கு’ வழக்கமாகக் கிடைக்கும் இடங்கள் பறிபோகாது; மேலும்தான் கூடும் என்ற ஒரு சமரச முயற்சியில் சொல்லப்பட்டுள்ள ஒன்று.

இது நடக்கக் கூடாது; நடக்குமா, நடத்த முடியுமா என்பது கேள்விக்குறி.

Sivabalan V Says:
July 25th, 2006 at 10:37 pm
தருமி சார்

பதிவுக்கு நன்றி.

கோ.இராகவன் Says:
July 25th, 2006 at 10:54 pm
இப்படியெல்லாம் வேற நடக்குதா…அடடா!

இதையெல்லாம் எதிர்த்து ஆதாரங்களோடு வழக்கு போட முடியாதா என்ன?

குறும்பன் Says:
July 26th, 2006 at 1:30 am
தருமி நன்றாக விளக்கியுள்ளீர்கள்.

/ தேர்வாளர்களாக இருப்பவர்களில் இன்றைய நிலையில் யார் பெருவாரியாக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன? இம்முறையினால் நேர்முகத் தேர்வுகள் ‘halo effect’ இல்லாமல் நேர்மையாக இருக்குமா என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். /
உறுதியாக “halo effect” இல்லாமல் இருக்காது.
ஆளின் நிறம், பெயர் & பேச்சை வைத்தே நம்மாளுங்க எடை போட்டுறுவாங்கப்பா

Ramani Says:
July 26th, 2006 at 2:20 am
4000 இடங்களில் மட்டும் ஒதுக்கீட்டை அமுல்படுத்திவிட்டு ஊடகங்களிடமிருந்து அரசு தப்பிக்கமுடியாது என்று நினைக்கிறேன். ஒதுக்கீட்டின் சில அம்சங்களில் எனக்கு மாற்று கருத்து இருப்பினும், பொதுவாக ஒதுக்கீடு அவசியம் தேவையே என்று கருதுகிறேன். 27% ஒதுக்கீடு என்று வாக்களித்துவிட்டு இதுமாதிரி catch வைத்தால் அது அர்ஜூன் சிங்கின் அரசியல் மூளையைத்தான் காட்டுகிறது.

தருமி Says:
July 27th, 2006 at 10:58 pm
ராகவன்,
//இதையெல்லாம் எதிர்த்து ஆதாரங்களோடு வழக்கு போட முடியாதா என்ன? //
நன்றி ராகவன்…ஒன்று சேருவோமா?

தருமி Says:
July 27th, 2006 at 11:05 pm
நன்றி - சிவபாலன், குறும்பன்.

தருமி Says:
July 27th, 2006 at 11:16 pm
ரமணி,
//….ஊடகங்களிடமிருந்து அரசு தப்பிக்கமுடியாது என்று நினைக்கிறேன்….//

1. ஊடகங்கள் யார் கைகளில் இப்போது? (சுந்தரவடிவேலின் கட்டுரையை வாசியுங்கள்)
2. ஊடகம் ஏறக்குறையாக முழுமையாக இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருப்பது கண்கூடு.
3. மேலே சொல்லியுள்ளதுபோல்,மிகவும் கற்றவர்கள் தொடர்பான UPSC தேர்வுகளிலேயே இந்த அளவு ‘திருவிளையாடல்” நடந்து வந்தும், இன்னும் மிகப் பெரும் அளவில் நாட்டிலோ, நம் வலைப்பதிவுகளிலோ எந்தவித எதிர்வினையும் அதற்கு இல்லாது இருக்கும்போது நீங்கள் சொல்வது நடக்குமா?
4. ஷரத் யாதவின் கட்டுரை the hindu-வில் வந்த அடுத்த நாள் letters to the Editor -ல் கடிதங்கள் வந்ததென்னவோ உண்மை. அக்கட்டுரையின் தாக்கம் நம் கற்றவர்களிடம் அந்த அளவோடு முடிந்தது.
5. இட ஒதுக்கீட்டால் நன்மை பெற்றவர்கள்கூட அடுத்த தலைமுறைக்குத் தாங்கள் செய்யவேண்டிய கடமையாக இதை எண்ணாது போவதும் நாம் பார்ப்பதுதான்.

தருமி Says:
July 27th, 2006 at 11:20 pm
மேலே சொன்ன சுந்தரவடிவேலின் கட்டுரைக்குரிய லின்க்:
http://bhaarathi.net/sundara/?p=278

மோகன் Says:
July 27th, 2006 at 11:31 pm
கண்காணிப்புக் குழு, அறிஞர் குழு என்றெல்லாம் அமைப்பது நமது நாட்டு அரசியல்வாதிகள் ஒரு முடிவுக்கும் வராமல் ஒரு விஷயத்தை இழுத்தடித்து, பிரச்சனையையே மக்களை மறக்க வைக்கும் ஒரு டெக்னிக்தானே!
மிக மிக சரியான வரிகள்

TheKa Says:
July 28th, 2006 at 12:38 am
தருமி,

இந்த UPSC சங்கதியை என்னால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. .

எனக்கு பல அதிர்ச்சியான தகவல்கள் உங்களின் கட்டுரையின் மூலமாக கிடைத்தது.

எனக்குப் பட்டது இதுதான், இன்னமும் நாம் இப்படி நலிந்தவனை அடித்து உலையில் போட்டு வாழ எத்தனித்தால், நக்சல்கள் புற்றீசல்கள் போல முளைப்பதை யாராலும் தடுக்க முடியாது. அறிந்து உணர்ந்து எல்லோரையும் அரவணைத்து செல்வதுதான் நாகரீகமடைந்த நமக்கு எல்லாம் அழகு.

தருமி Says:
July 28th, 2006 at 6:46 pm
தெக்கா,
நானும் அதிர்ச்சி அடைந்தது உண்மை; நம்பகூட முடியாமல்தான் முதலில் கேள்விப்பட்டது என்று ஜாக்கிரதையாக எழுதினேன். ஷரத் யாதவ் கட்டுரை பார்த்த பின்பே நிச்சயமாயிற்று.

ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமாயின்: பயங்கரம் !

TheKa Says:
July 28th, 2006 at 7:11 pm
“பயங்கரத்தில்” ஆரம்பித்தது பின்னாலில் பயங்கர”வாதமாக” மாறாமல் இருந்தால் சரி.

Sivabalan V Says:
August 18th, 2006 at 10:09 pm
தருமி அய்யா,

உங்களின் இந்தப் பதிவை என் பதில் இனைத்தமைக்கு மிக்க நன்றி.

செல்வன் Says:
August 19th, 2006 at 8:40 am
பார்ட்னர்

இந்த பதிவில் பின்னூட்டம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது போல.தமிழ்மண முகப்பில் இருந்து வந்தேன்.வீடு மாறியாச்சா,இல்லையா?

தருமி Says:
August 21st, 2006 at 9:31 am
partner,
இந்தப் பின்னூட்டத்தை நான் மட்டுறுத்தாமலேயே வந்திருக்கிறதே, எப்படி?
இதைக் கைவிட்டு விட்டு http://dharumi.blogspot.com/ -க்குப் போயாச்சு. அதற்கு இன்னும் பின்னூட்டம் வேலை செய்ய ஆரம்பிக்கவில்லை.

Bruno Says:
August 30th, 2006 at 5:26 pm
தற்போது I.I.T.களில் உள்ள மொத்த இடங்கள் : 4000
54% இட அதிகரிப்பில் கூடும் இடங்கள் : 2160
ஆக மொத்த இடங்கள் : 6160
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (6160ல் 27%) : 1663
தாழ்த்தப்பட்டவர்களுக்கு - SC (6160ல் 15%) : 924
தாழ்த்தப்பட்டவர்களுக்கு - ST (6160ல் 7.5%) : 462
B.C. + S.C. + S.T. 27%+15%+7.5%) : 3049

49.5 % of 6160 = 3049.2

சரி தான் என்பது என் அபிப்ராயம்

No comments:

Post a Comment