Monday, June 16, 2008

258. தருமியின் சின்னச் சின்ன ஆசைகளும், சில கேள்விகளும் - 1

*


முன்னுரை:

"சின்னச் சின்ன ஆசைகளும், கேள்விகளும்" என்ற தலைப்பில் ஒரு தொடர்பதிவொன்று போட்டுவர ஆசை பல நாளாக. இதில் என் சமுதாயம் சார்ந்த ஆசைகளையும், கேள்விகளையும் அவ்வப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை. ஆசைகளே கேள்விகளாகவும், கேள்விகள் எல்லாமே ஆசைகளிலிருந்து பிறப்பதாயும் உள்ளன. தினசரி செய்தித்தாள் வாசிக்கும்போதோ, சாலையில் போய்க்கொண்டிருக்கும்போதோ மனத்தில் பிறக்கும் கேள்விகளையும், ஆசைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள இப்பதிவு. ஒவ்வொன்றாய் இல்லாமல் அவ்வப்போது ஒரு தொகுப்பாக நாலைந்து அல்லது அதற்கும் கொஞ்சம் குறைவாகவோ கூடுதலாகவோ என் ஆசை / கேள்விகளோடு சந்திக்கிறேன்.

முதல் பதிவு:

1. நெடுநாளைய ஆசை இது; நெஹ்ரு காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது நமது அரசியல்வாதிகளிடம் காசுப் பித்து. எத்தனை எத்தனை ஊழல் குற்றச் சாட்டுகள். இதோ சட்டம் அவர்கள் மேல் பாய்ந்துவிடும் என்று பாம்பு-கீரி வித்தை காட்டுபவன் போல், நம் C.B.I.-யும் இன்னும் ஏனைய அரசு அதிகார மையங்களும் வித்தை காட்டிக்கொண்டிருக்கிறார்கள். open and shut case என்று டான்ஸி வழக்கைச் சொன்னார்கள்; லல்லு மாட்டுக்குக் காட்டுவதுபோல் நம் C.B.I.-க்குத் 'தண்ணி' காட்டி விட்டார். யாரோ ஒரு டெல்லி அமைச்சர், அவரின் குளியலறை முதற்கொண்டு 500 ரூபாய் நோட்டுகளைச் சாக்கில் கட்டி வைத்ததாகப் பிடித்தார்கள் - எல்லாம் என்ன ஆயிற்றோ? கொலைக்குற்றம் சாட்டப் பட்ட அமைச்சர்களும் நீதிமன்றங்களிலிருந்து வெளியே வந்ததும் மீண்டும் அமைச்சராகிறார்கள்.

எப்போதாவது ஒரே ஒரு அரசியல்வாதியாவது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்கள் சேர்த்த சொத்தும் பறிமுதல் செய்யப் படவேண்டுமென்ற என் நீண்ட கால ஆசை என்றாவது நிறைவேறுமா?

2. பெருகி வரும் வாகனங்கள், பெருக முடியாத சாலைகள்- அமெரிக்க மாமாக்கள் மாதிரி...ஸ்பாட் பைன்... இல்லாட்டா...ஏற்கெனவே என் முந்திய பதிவொன்றில் சொன்னது மாதிரி ஏதாவது நடந்து நாட்டுக்கும் நமக்கும் நல்லது நடந்துவிடாதா என்ற எக்கம் என்று நிறைவேறும்?

3. தலையில் ஒழுங்காக தலைக்கவசம் போட்டுச் செல்லும் ஒரு போலீஸ்காரரையாவது பார்க்க ஆசையாக இருக்கிறது. (சென்ற வாரம் முழுச் சீருடையில் - traffic police uniform-ல் அலைபேசியில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டிச் சென்ற ட்ராபிக் போலீஸ்காரருடன் போட்ட சண்டைக்குப் பிறகும்கூட இதுமாதிரி ஆசைகள் வருவது நிற்க மாட்டேன் என்றால் அது என் தப்புதானோ?)

4. தொலைக்காட்சிப் பெட்டி விளம்பரங்களில் வரும் ஆறே நாட்களில் சிகப்பழகாக்கும் க்ரீம்களும், பட்டுப் போன்ற கூந்தல் தரும் ஷாம்பூக்களும் நம்பமுடியாத, நடக்க முடியாத விஷயங்கள் என்று மக்களுக்குப் புரிந்துவிட்டால் எப்படியிருக்கும்?

5. ஆனாலும் அந்த ஷாம்பு விளம்பரங்களில் வரும் பெண்களின் கூந்தல் என்ன sythentic product-ஆல் செய்யப்படுகிறது என்ற விவரம் யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்களேன்.

6. நடைபெறும் ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகளில் சரியாக தலைக்கு நேர்மேலே காமிரா இருப்பதாகச் சில காட்சிகள் "சுடப்பட்டு" காண்பிக்கப் படுகின்றன. அதற்கு முந்திய ப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளிலும் ஒரு காமிரா கோணம் மிக உயரமான இடத்திலிருந்து மைதானத்தின் வெளிப்புறம் காண்பிக்கப் பட்டு பிறகு அப்படியே விளையாடுபவர்களின் தலைக்கு மேல் உயரமான கோணத்தில் காண்பிக்கப்ட்டன. நிச்சயமாக ரிமோட் வைத்து எடுக்கப் படும் படங்கள் என்பது மட்டுமே புரிகிறது. ஆனாலும் அவ்வளவு பெரிய கால்பந்து மைதானத்தின் "நடு செண்டரில்" எப்படி அது முடிகிறது? நடுவில் கம்பி போட்டு காமிராவை நகர்த்த முடியுமா, என்ன?

பி.கு. கடைசி இரு கேள்விகளை தூங்கிப் போனதாகத் தெரியும் 'விக்கிப் பசங்க' கிட்டதான் கேட்கணுமோ?
*

24 comments:

இலவசக்கொத்தனார் said...

கர்நாடகாவில் போன முறை நடந்த தேர்தலில் காண்பித்த சொத்து பலமடங்காகி இந்த முறை 300த்து சில்லறை கோடியாம் ஒருத்தருக்கு. கேள்வி கேட்பாரே இல்லை!!

ச.மனோகர் said...

புரபஸர் சார்..சமீபத்திய ஷாம்பூ விளம்பரங்களும்,சோப்பு விளம்பரங்களும் சின்னஞ் சிறிய சிறுமிகளை குறி வைத்து எடுக்கப் படுவதை கவனித்தீர்களா?

துளசி கோபால் said...

நிறைவேறவேச் சான்ஸ் இல்லாத ஆசைகளைக் கனவிலும் நினைக்கக்கூடாதுங்க தருமி.

'கனாக்காணுங்கள்'னு பெரியவர் சொன்னதை இப்படித் தப்பர்த்தம் செஞ்சுக்கலாமா? ;-))))

தருமி said...

துளசி,
தப்பு .. தப்பு .. தப்பு ..

மூணு தடவ போட்டுக்கிட்டேன்.

தருமி said...

பாபு,
nip it in the bud!!!

தருமி said...

கொத்ஸ்,
இதெல்லாம் ஜுஜுபி ....!!

அந்தக் கடைசி வரியைக் கண்டுக்கலை போலும் ...

உண்மைத்தமிழன் said...

//1. நெடுநாளைய ஆசை இது; நெஹ்ரு காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது நமது அரசியல்வாதிகளிடம் காசுப் பித்து. எத்தனை எத்தனை ஊழல் குற்றச் சாட்டுகள். இதோ சட்டம் அவர்கள் மேல் பாய்ந்துவிடும் என்று பாம்பு-கீரி வித்தை காட்டுபவன் போல், நம் C.B.I.-யும் இன்னும் ஏனைய அரசு அதிகார மையங்களும் வித்தை காட்டிக்கொண்டிருக்கிறார்கள். open and shut case என்று டான்ஸி வழக்கைச் சொன்னார்கள்; லல்லு மாட்டுக்குக் காட்டுவதுபோல் நம் C.B.I.-க்குத் 'தண்ணி' காட்டி விட்டார். யாரோ ஒரு டெல்லி அமைச்சர், அவரின் குளியலறை முதற்கொண்டு 500 ரூபாய் நோட்டுகளைச் சாக்கில் கட்டி வைத்ததாகப் பிடித்தார்கள் - எல்லாம் என்ன ஆயிற்றோ? கொலைக்குற்றம் சாட்டப் பட்ட அமைச்சர்களும் நீதிமன்றங்களிலிருந்து வெளியே வந்ததும் மீண்டும் அமைச்சராகிறார்கள்.//

பேராசிரியரே..

இல்லாத ஊருக்கு வழி கேட்டால் எப்படி?

நாட்டின் முதல் தலைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டு அது தொங்கலில் விடப்பட்டுள்ளது.. அவ்வளவும் தெரிந்துதான் அந்தப் பதவிக்கே கொண்டு வந்துள்ளார்கள்.. பிறகு மற்றவர்களைப் பற்றி கேட்க முடியுமா?

பங்களாதேஷில் தற்போது நடப்பதைக் கவனித்தீர்களா..? ராணுவ உதவியுடன் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள இடைக்கால அரசு ஆண்ட கட்சி, எதிர்க்கட்சி என்று இருவரையுமே பிடித்து உள்ளே போட்டிருக்கிறார்கள். எல்லாம் லஞ்ச ஊழல் புகார்தான்..

ராணுவ ஆட்சி வந்தால்தான் இதுக்கெல்லாம் விடிவு கிடைக்கும்..

அப்புறம்.. மதுரைல சன் டிவி தெரியுதுங்களா..?

உண்மைத்தமிழன் said...

//எப்போதாவது ஒரே ஒரு அரசியல்வாதியாவது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்கள் சேர்த்த சொத்தும் பறிமுதல் செய்யப் படவேண்டுமென்ற என் நீண்ட கால ஆசை என்றாவது நிறைவேறுமா?//

மதுரையின் நான்கு வீதி ஜோஸியர்களிடம் கேட்டால்கூட உங்களது இந்த ஆசை நடவாத காரியம் என்று 'கிளி'யே சொல்லிவிடும்..

உண்மைத்தமிழன் said...

//பெருகி வரும் வாகனங்கள், பெருக முடியாத சாலைகள்- அமெரிக்க மாமாக்கள் மாதிரி...ஸ்பாட் பைன்... இல்லாட்டா...ஏற்கெனவே என் முந்திய பதிவொன்றில் சொன்னது மாதிரி ஏதாவது நடந்து நாட்டுக்கும,் நமக்கும் நல்லது நடந்துவிடாதா என்ற எக்கம் என்று நிறைவேறும்?//

நடக்க முடியாததையெல்லாம் நினைத்து வைத்துக் கொண்டால், அதற்கு அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் எப்படி பொறுப்பு ஆவார்கள்..?

உண்மைத்தமிழன் said...

தங்களுக்கு ஏதாவது நடக்க வேண்டும் என்றதானே 100 சதவிகித ஆட்சியாளர்களும் உள்ளார்கள். பின்பு நாட்டை பற்றி யார் கவலைப்படப் போறா..? இதுவும் நடக்கவே நடக்காது..

உண்மைத்தமிழன் said...

//தலையில் ஒழுங்காக தலைக்கவசம் போட்டுச் செல்லும் ஒரு போலீஸ்காரரையாவது பார்க்க ஆசையாக இருக்கிறது. (சென்ற வாரம் முழுச் சீருடையில் - traffic police uniform-ல் அலைபேசியில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டிச் சென்ற ட்ராபிக் போலீஸ்காரருடன் போட்ட சண்டைக்குப் பிறகும்கூட இதுமாதிரி ஆசைகள் வருவது நிற்க மாட்டேன் என்றால் அது என் தப்புதானோ?)//

நிச்சயம் தப்பு.. சிவிக்சென்ஸ் உங்களுக்கு ரொம்ப முத்திப் போச்சுன்னு நினைக்கிறேன். இதுக்கு ஒரே வழி 'முக்தி'யில் இறங்குவதுதான்..

உண்மைத்தமிழன் said...

//தொலைக்காட்சிப் பெட்டி விளம்பரங்களில் வரும் ஆறே நாட்களில் சிகப்பழகாக்கும் க்ரீம்களும், பட்டுப் போன்ற கூந்தல் தரும் ஷாம்பூக்களும் நம்பமுடியாத, நடக்க முடியாத விஷயங்கள் என்று மக்களுக்குப் புரிந்துவிட்டால் எப்படியிருக்கும்?//

பறந்து, பறந்து அடிக்கிறதை என்னிக்கு நடக்காத விஷயம்னு நம்ப ஆரம்பிக்கிறாங்களோ அன்னிக்கு இதையும் நம்புவாங்க..

ஆமா.. இந்த வயசுல அவங்க மேல உங்களுக்கு ஏன் இம்புட்டு கோபம்..? அவுககிட்ட இருக்கு.. அழகு பண்ணிக்கிறாங்க.. இல்லாத நாம..

உண்மைத்தமிழன் said...

//ஆனாலும் அந்த ஷாம்பு விளம்பரங்களில் வரும் பெண்களின் கூந்தல் என்ன sythentic product-ஆல் செய்யப்படுகிறது என்ற விவரம் யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்களேன்.//

அவுத்துப் போட்ட கூந்தலோட கைல பாக்கெட்டை பிடிச்சுக்கிட்டு ஈன்னு இளிக்கிற அந்தப் பொண்ணுக்கே தெரியாது.. உங்களுக்குத் தெரிஞ்சாகணும்னு குதிச்சா எப்படி?

எஇதுக்கும் தகவல் உரிமை பெறும் சட்டத்தை அணுகி உங்களது குறையைத் தீர்த்துக் கொள்ள முயலுங்கள் பெரியவரே..

உண்மைத்தமிழன் said...

//நடைபெறும் ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகளில் சரியாக தலைக்கு நேர் மேலே காமிரா இருப்பதாகச் சில காட்சிகள் "சுடப்பட்டு" காண்பிக்கபபடுகின்றன. அதற்கு முந்திய ப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளிலும் ஒரு காமிரா கோணம் மிக உயரமான இடத்திலிருந்து மைதானத்தின் வெளிப்புறம் காண்பிக்கப்பட்டு பிறகு அப்படியே விளையாடுபவர்களின் தலைக்கு மேல் உயரமான கோணத்தில் காண்பிக்கப்ட்டன. நிச்சயமாக ரிமோட் வைத்து எடுக்கபபடும் படங்கள் என்பது மட்டுமே புரிகிறது. ஆனாலும் அவ்வளவு பெரிய கால்பந்து மைதானத்தின் "நடு செண்டரில்" எப்படி அது முடிகிறது? நடுவில் கம்பி போட்டு காமிராவை நகர்த்த முடியுமா, என்ன?//

ஐயோ.. ஈரோப் புட்பால் மேட்ச்செல்லாம் தெரியுதா உங்க வீட்ல..? ஜமாயுங்க..

எனக்கும் தெரியல.. யாராவது தெரிஞ்சவங்க சொன்னா வந்து படிச்சுக்குறேன்..

உண்மைத்தமிழன் said...

//பி.கு. கடைசி இரு கேள்விகளை தூங்கிப் போனதாகத் தெரியும் 'விக்கிப் பசங்க' கிட்டதான் கேட்கணுமோ?//

அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.. காத்திருப்போம்..

ஆனாலும் செம வித்தியாசமான பதிவு ஸாரே.. குட்.. வெரிகுட்..

தருமி said...

//ராணுவ ஆட்சி வந்தால்தான் இதுக்கெல்லாம் விடிவு கிடைக்கும்.. //

ஏதோ இப்போ பதிவாவது போட்டுக்கிட்டு இருக்கோம். அப்போ அதுவும் முடியாது. மற்றபடி எல்லாம் ஜெ .. ஜெ..ன்னு (ஜே.. ஜே ன்னு சொல்லணுமோ?!) நடந்துகிட்டுதான் இருக்கும்.

//அப்புறம்.. மதுரைல சன் டிவி தெரியுதுங்களா..?//
இப்போதைக்கு தெரியுது .. அப்புறம் எப்படியோ தெரியலை..

உண்மைத்தமிழன் said...

///தருமி said...
//ராணுவ ஆட்சி வந்தால்தான் இதுக்கெல்லாம் விடிவு கிடைக்கும்.. //
ஏதோ இப்போ பதிவாவது போட்டுக்கிட்டு இருக்கோம். அப்போ அதுவும் முடியாது. மற்றபடி எல்லாம் ஜெ .. ஜெ..ன்னு (ஜே.. ஜே ன்னு சொல்லணுமோ?!) நடந்துகிட்டுதான் இருக்கும்.///

ஆமா.. 'ஜே..ஜே..' என்றுதான் சொல்லணும்.. 'ஜெ'ன்னு சொன்னா அதுவும் ஒரு வகையில் குட்டையில் ஊறிய மட்டைதான்..

///அப்புறம்.. மதுரைல சன் டிவி தெரியுதுங்களா..?//
இப்போதைக்கு தெரியுது .. அப்புறம் எப்படியோ தெரியலை..///

அதுவரைக்கும் நல்லா பாருங்க.. 90 நாள் டைம் கேட்டிருக்காங்க.. டைமும் கொடுத்திருக்காங்க.. அதுக்கப்புறம் காமெடி இருக்கு..

வால்பையன் said...

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தான் பேராசை சார்!

இருந்தாலும் எல்லா அரசியல்வாதிகளும் திருந்தி விட்டால் நான் ஆத்திகனாக மாறும் அபாயம் உள்ளது,


வால்பையன்

வால்பையன் said...

இது உங்களை பின் தொடர்வதற்கு

வால்பையன்

தருமி said...

ஐயா சரவணா,
திகுடு முகுடா அடிச்சிப் போட்டுட்டு, //செம வித்தியாசமான பதிவு ஸாரே..// அப்டின்னும் சொல்லிட்டுப் போய்ட்டீங்க ..

எதுக்கும் நன்றி.

தருமி said...

வாலு,
//இருந்தாலும் எல்லா அரசியல்வாதிகளும் திருந்தி விட்டால் நான் ஆத்திகனாக மாறும் அபாயம் உள்ளது,//

கவலையே படாதீங்க .. சான்ஸே இல்லை.

Aravindhan said...

எல்லாம் இப்படி தான் சார் discourge பண்ணுவாங்க
அதுக்கெல்லாம் கவலை படாதீங்க.நீங்க உங்க மெகா-தொடர தைரியமா நடத்துங்க

எனக்கு கூட ரொம்ப நாலா ஒரு கேள்வி
ஒரு நாய்க்கு மின் விளக்கு கம்பத்து மேலயும்,வண்டி tyre மேலயும் அப்படி என்ன வெறுப்பு ?
தெரிஞ்சா சொல்லுங்க

ஷாம்பூ விளம்பர பெண்களோட முடி அவளோ சூப்பரா இருக்க காரணம் கிராபிக்ஸ் தான்.editingla brightnessa increase பண்ணா முடிஞ்சிது. இருந்தாலும் ஒரு விளம்பரத்துல ஒரு பொண்ணு முடிய வச்சி கல்ல பேத்து எடுக்குற மாறி இருக்குமே அப்புறம் முடி கார் கதவுல மாடி கதவே ஒடஞ்சி போற மாறி.....டைரக்டர் பேரரசு கூட அப்பிடி யோசிக்க முடியாது

ரமணா said...

1.உழலை ஒழிக்க ரமணா போல் யாரவது வரமாட்டார்களா என ஏக்கம் எங்கும் பரவியுள்ளது.

2.பெட்ரோல் விலை 200 க்கு எகிறும் போது தன்னால சாலைகளெல்லாம் சத்தமில்லாமல் ஒதுங்கி வழிவிடலாம்

3.காவல் துறையின் ஈரல் கெட்டுப்போச்சு என்ற அரசியல் தலைவர்களின் பேச்சுக்குக்ப் பின்னால் இது பகல் கன்வு தான்

4.புற அழகு தேவை இல்லை அக அழ்கே போதும் எனும் ஞானோதயம் வரும் போது.

5.இது என்னா சார் பிரமாதம் google earthu அண்ணாவும்,you tube தம்பியுயும் இதை விட ஜால வித்தை காட்டுகிறார்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post.html) சென்று பார்க்கவும். நன்றி !

நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி.

Post a Comment