Thursday, August 28, 2008

ஒரு துயரச் செய்தி

நம் பதிவுலகத்தில் நாமெல்லாம் அறிந்திருந்த திருமதி. அனுராதா

இன்று (28.8.2008) காலை 9. 52 மணிக்கு இயற்கை எய்திவிட்டார்.


அவரது இறுதிச் சடங்குகள் நாளை காலை 8 மணியளவில் நடக்கவிருக்கிறது.



அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தாரின் துன்பத்தோடு நானும் இணைந்து கொள்கிறேன்.

7 comments:

ஜெகதீசன் said...

:(
வருந்துகிறேன்..
ஆழ்ந்த அனுதாபங்கள் அவரது குடும்பத்தாருக்கு...

cheena (சீனா) said...

மிகவும் வருந்தத்தக்க செய்தி - அவரது மனோ தைரியம் அவரை இவ்வளவு நாள் வாழ வைத்தது. சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

பாலராஜன்கீதா said...

திருமதி.அனுராதா அவர்களை இழந்து வாடும் அவரின் இல்லத்தினரின் துக்கத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்.
:-(

துளசி கோபால் said...

வருந்துகின்றோம்.

அனுவின் ஆத்மா அமைதி பெறவேணும்.

Joe said...

May her soul rest in peace!

May God help her near & dear ones recover from this sorrow.

-/சுடலை மாடன்/- said...

புற்று நோயுடன் போராடியவர்களில் பிழைத்தவர்கள் மிகச் சிலரே என்றாலும் அனுராதா அம்மையார் வலைப்பதிவுலகில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காகவே நம்மிடையே இயங்கிக் கொண்டிருந்தமையால், அவரது மறைவு இன்று மிக வருத்தத்தையளிக்கிறது. அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் நோயினால் அவதியுற்றுக் கொண்டிருந்த பொழுது அவருடைய கணவர் (அவரும் ஒரு வலைப்பதிவர் என்று இப்பொழுதுதான் அறிந்தேன்) உடனிருந்து கவனித்த விதம் மனம் நெகிழச்செய்கிறது.

வலைப்பதிவுகளையும், தமிழ்மணம் போன்ற வலைப்பதிவர் குழுமங்களையும் சுயவிளம்பரக் கூச்சல்களுக்குப் பயன்படுத்தி அனைவர் நேரத்தையும் வீணடிக்கும் சிலர் மத்தியில் வலைப்பதிவுகளின் தேவையை/மேன்மையை உணரவைத்தன அனுராதா அம்மையாரின் இடுகைகள்

அவர் முன்னொரு பதிவில் கீழ்க்கண்ட ஒரு ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்:

//புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியிடம் எப்படிப் பேச வேண்டும்,எப்படி அணுக வேண்டும் எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு அவரது கணவர்/மனைவி/பெற்றோர் போன்ற நெருங்கிய உறவினர்களுக்கு ஆரம்பத்திலேயே மருத்துவமனையில் விளக்கமாகக் கவுன்சிலிங் வைக்க வேண்டும்.பெரும்பாலான மருத்துவமனைகளில் கவுன்சிலிங்கே இல்லை."பேஷண்டை நல்லாப் பாத்துக்குங்க.ஓகே?"என்று டாக்டர் கூறும் ஓரிரு வார்த்தைகள் தான் இப்போதைக்கு நடக்கும் கவுன்சிலிங்.இது எப்படி கவுன்சிலிங் ஆகும்?இதற்கென மருத்துவமனைகளில் உளவியல் வல்லுநர்கள் நியமிக்கப்பட வேண்டும்.//

முன்பு Sanitary Napkins பற்றி பதிவர் ரம்யா நாகேஸ்வரன் ஏற்படுத்திய விழிப்புணர்வுக்குப் பின் தமிழக அரசுக்கு எடுத்துரைக்கப்பட்டு அரசே அவற்றை வழங்குவதாக யாருடைய பதிவிலோ படித்த ஞாபகமிருக்கிறது. அதுபோல் திருமதி அனுராதாவின் நினைவாக அவருடைய ஆசையை தமிழக அரசுக்கு வலைப்பதிவர்கள் விண்ணப்பமாக வைக்கலாமா?

நன்றி - சொ. சங்கரபாண்டி

வால்பையன் said...

எனது சித்தி ஒருவர் கூட
புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி இறந்தார்
புற்றுநோயின் வலி கொடியது.

அண்ணாருக்கு என் அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்

Post a Comment