Friday, March 20, 2009

299. கதைக் கரு ஒன்று தேடி ...

*

சென்ற மாதத்தில் ஒரு நாள் காலை அமெரிக்க தூதரகத்தின் முன்னால் தேவுடு காக்க வேண்டியதிருந்தது. பக்கத்தில் இருந்த ஒரு போன் பூத்துக்கு அருகில் இரு சக்கர வாகனத்தில், நண்பர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் உடன் இருக்க இரண்டு மணி நேரம் அங்கிருந்தேன். அவ்வப்போது வாசித்துக் கொண்டும், சுற்றி நடப்பவைகளைப் பார்த்துக் கொண்டும் காலம் கடத்தினேன்.

அமெரிக்கா செல்ல விசா வாங்க வந்த மக்கள் தங்கள் நேர்காணல் முடித்துவிட்டு, தெரிந்துவிட்ட முடிவுகளோடு வந்து கொண்டிருந்தார்கள். தனியாக வந்தவர்களில் பலரும் நானிருக்கும் இடத்திற்கருகிலிருந்த போன் பூத்துக்கு வந்து தொலைபேசினார்கள்.ஒட்டுக்கேட்க முடியாத தூரம். ஆனால் பலருக்கும் வெளியே யாராவது காத்திருந்தார்கள் என்னைப் போலவே. அவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது ரொம்ப interesting ஆக இருந்தது. (இந்த interesting-க்கு ஒரு நல்ல தமிழ்ச்சொல் தேடிக்கொண்டே இருக்கிறேன்; உதவி கேட்டும் இன்னும் யாரும் உதவவும் வரவில்லை!) பார்த்தவைகளை வைத்து அவர்களின் பின்புலம், விசா கிடைத்தவர்கள் கிடைக்காதவர்கள், அவர்களின் reactions எல்லாம் பார்க்க நன்றாயிருந்தது. பார்த்தவைகளை வைத்து, தெரியாதவைகளை நானே கற்பனை செய்து பார்த்தேன். இரண்டு மணி நேரமும் விரைந்து ஓடிவிட்டது. நான் பார்த்தவைகள் கருப்பிலும், என் கற்பனைகள் வண்ணத்திலும் கீழே ...

*
பாவம் அந்த இளைஞர். தூதரகம் தாண்டி, பேருந்து நிறுத்தம் தாண்டி வந்தவருக்கு அதற்குமேல் பொறுமை இல்லை. கழுத்துப் பட்டையை ( tie), 'அடப் போங்கடா! நீங்களும் ஒங்க அமெரிக்காவும் ..' என்பதுபோல் உருவி கால்சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டு தனக்குள் ஏதோ பேசிக்கொண்டே சென்றார்.

*
இன்னொரு இளைஞர். கழுத்துப் பட்டி ஏதுமில்லைதான். ஆனால் அசத்தலாக உடை அணிந்திருந்தார். கையில் ஐ-போன் இருந்தது. அடிக்கடி அதில் பேசிக்கொண்டிருந்தார். ஒரு இடத்திலும் இருப்புக் கொள்ளாமல் தவிப்போடு இருந்தார். பிரசவ வார்டு முன்னால் அங்குமிங்கும் அலையும் மனிதர் போல் இருந்தார்.

கையில் ஐ-போன்; ஆகவே அமெரிக்காவிலிருந்து வந்தவராக இருக்க வேண்டும். புது மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். தன்னோடு புது மனைவியை அழைத்துச் செல்ல, மனைவியை விசாவிற்காக அனுப்பி விட்டு, கிடைக்குமோ கிடைக்காதோ என்ற தவிப்பில் மனுசன் இருந்திருக்க வேண்டும். என்ன ஆச்சோ; முடிவு தெரியவில்லை.

*
இரு இளம் பெண்கள். ஒருவர் முகத்தில் பரவசம்; அடுத்த பெண் முகம் இருளடைந்திருந்தது. முதல் பெண் தன் மகிழ்ச்சியை முழுவதுமாகக் காட்ட முடியாத நிலை. அடுத்த பெண்ணுக்கு ஏதோ சமாதானம் சொல்லிக்கொண்டு வந்தார் என்று நினைக்கிறேன்.

அந்தப் பெண்கள் ஒரே இடத்தில் வேலை செய்பவர்களாகவோ அல்லது விசாவுக்கு வரிசையில் நிற்கும்போது நன்கு பேசி அதனால் தோழமை கொண்டவர்களாகவோ தோன்றியது. விட்டால் விசா கிடைத்த பெண் தெருவிலேயே துள்ளிக் குதித்துக் கொண்டாடியிருப்பார்; ஆனால்,அடுத்த பெண்ணின் சோகத்தில் கட்டாயமாகப் பங்கெடுக்கும் நிலை.

*
இன்னொரு இளம் பெண். She was in a very formal and official attire. கோட்டு போட்டுக்கொண்டு வந்திருந்தார். தனியாக வந்தவர் முகத்தில் மகிழ்ச்சி. நேரே தொலைபேசப் போனார்.

சில மாதங்களுக்காக இங்கு வேலைபார்க்குமிடத்திலிருந்து அமெரிக்கா செல்லும் பெண்ணாக இருக்க வேண்டும். நேரே அலுவலகத்திலிருந்தே வந்திருப்பாரென நினைக்கிறேன்

*
அடுத்தது, ஒரு குடும்பம். தாய், தந்தை, 8-10 வகுப்புகளில் படிக்கக்கூடிய ஒரு மகன், மகள். தாய் விசாவிற்காக வந்திருக்கிறார்; கிடைத்தும் விட்டது.

நடுத்தரக் குடும்பம்; தாய் அமெரிக்கா செல்ல இருக்கிறார். விசா கிடைத்ததில் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி; அந்த அம்மாவுக்கும்தான். ஆனால் அந்த ஆளுக்கு அதில் விருப்பமில்லை போலும். முகத்தில் மகிழ்ச்சி இல்லை. பொறாமையா, ஆற்றாமையா தெரியவில்லை. அவரால் தடுக்கவும் முடியாது என்பதும் நன்கு தெரிந்தது. சரியான MCP ஆக இருப்பார் போலும்! மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத அவஸ்தையில் இருந்தார். அதனால் அந்த அம்மா தன் மகிழ்ச்சியை தன் பிள்ளைகளோடு பகிர்ந்து கொள்ளாது இருந்தார்.



*
அடுத்து இரு பெரியவர்கள். தம்பதிகள். இருவருக்குமே என்னைவிட வயது அதிகம் இருக்கும்.

வழக்கமாக பெற்றோர்களை அழைப்பதே baby sitting என்பதற்காகத்தான் என்று சொல்வதுண்டு. இவர்கள் போனால் இவர்களை யார் கவனிப்பது என்று தோன்றியது. இங்கிருந்து செல்லும் பெற்றோர்கள் அங்கே இருப்பது ஒரு golden cage-ல் இருப்பது போன்று என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான்கு சுவர்களுக்குள் மாதக்கணக்காக இருந்து ஓடிவந்ததாகச் சொன்னவர்களும் உண்டு. 'ஞாயிற்றுக் கிழமை கோவிலுக்குப் போவோம்; அன்றுதான் மற்ற மனிதர்களைப் பார்ப்பது பேசுவது எல்லாமே' என்ற ஒரு நண்பன்; 'சாயந்தரம் ஆச்சா .. அப்படியே வெளியே போய் ஒரு டீ அடிச்சிட்டு நாலு நண்பர்களோடு அரட்டை அடிச்சிட்டு வீட்டுக்கு வர்ர சுகம் இல்லை'டா' என்று சொன்ன நண்பன்; 'வேற வழியே இல்லையா; எத்தனை நாள் சும்மா உக்காந்துகிட்டே இருக்கிறதுன்னு பிள்ளையாண்டானோட கணினியில் உக்காந்து மயில் அனுப்பப்பழகி, இப்போ ப்ளாக் எழுதுற அளவுக்கு வந்தாச்சு' என்ற நண்பன் -- இவர்களெல்லோரும் நினைவுக்கு வந்தார்கள்.

*
கடைசியில் மகளும் வந்தாள் மகிழ்ச்சியாய் தலையை ஆட்டிக் கொண்டே ...

*
எத்தனை எத்தனை மனித உணர்வுகள். நல்லா கதை எழுதுற ஆள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலே அவருக்குப் பல கதைக் கரு அங்கே கிடைக்குமென்று தோன்றியது. என்னைப் போன்ற மொடாக்குகள் வெறுமனே வேடிக்கை பார்க்க மட்டும்தான் லாயக்கு என்றும் தோன்றியது.


********************

எங்க ஊரு ஆளுகதான் அந்த விஷயத்தில ரொம்ப மோசம் அப்டின்றது என் நினைப்பு. வரிசை அப்டின்ற தத்துவமே பிடிக்காத ஆட்கள் எங்க ஊரு ஆட்கள். ATM-ல் அனேகமாக மாதத்திற்கு இரண்டு தடவையாவது யாருடனாவது சண்டை போட்டே ஆக வேண்டியதிருக்கிறது. அதென்னவோ தெரியவில்லை ... வரிசையில் ஒருத்தனுக்குப் பின்னால நான் நிக்கலாமா அப்டின்ற 'தன்மான' உணர்வு மிக்க ஆளுக எங்க ஊரு ஆளுக! அப்படி ஒண்ணும் பெரிய வரிசையாக இருக்காது. ஆனாலும் ஏற்கெனவே நிற்பவரின் பின்னால் வந்து நின்றால் அது ஒரு பெரிய பிரஸ்டீஜ் விஷயமாகப் போகிறது எங்க ஆளுங்களுக்கு. ஏதாவது சொன்னால், 'நீங்க போங்க சார்; உங்களுக்குப் பிறகுதான் நான் போவேன்' என்பார்கள்; ஆனால் வரிசையில் மட்டும் நிற்க மாட்டார்கள். நான் கேட்டால் இந்த வசனம். கேட்காமல் விட்டால் முடிந்தால் நம்மைத் தாண்டி போக முற்படுவார்கள். இந்த மாதிரி ஆட்களுடன் கட்டாயமா சண்டைதான். அதென்னமோ இந்த மாதிரி ஆட்களைக் கண்டால் அப்படி ஒரு எரிச்சல். இதில் என்ன வயித்தெரிச்சல் என்றால், வயசு, படிப்பு, சமூக நிலை இதுபோன்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் நிறைய மனிதர்களை இப்படிப் பார்க்க முடிகிறது.

சரி, நம்ம ஊர் மக்கள்தான் இப்படி என்ற நினைப்பில் இருந்த எனக்கு சென்ற வாரம் சென்னை விமான நிலையத்தில் உள்ளே போவதற்கு சீட்டு வாங்குமிடத்தில் இன்னொரு அனுபவம். கூட்டமேயில்லை. ஒருவர் சீட்டு வாங்கிக்கொண்டிருக்கிறார். நான் அவருக்குப் பின்னால் போய் நிற்கிறேன். அப்போது என்னைவிட ஓரிரு வயது குறைந்த மனிதர் வந்து என்னைத் தாண்டிப் போய் ஓரமாக நின்றார். அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். மனிதர் ஓரக்கண்ணால் என்னை இருமுறை பார்த்தார்; சரியான திருட்டிப் பார்வையாகத் தோன்றியது. என்ன செய்கிறார் என்று பார்த்தேன். முன்னால் இருந்தவர் சீட்டு வாங்கிச் சென்றதும் இந்த மனிதர் சீட்டுக்கு காசைக் கொடுத்தார். 'ஹலோ! சினிமா டிக்கெட்டு எடுக்கிற பழக்கமோ' என்றேன். மனிதர் என் பக்கமே இப்போது திரும்பவில்லை. கையிலிருந்த ரூபாய் நோட்டால் அவர் கையைத் தட்டி, 'ஹலோ உங்களத்தான் கேட்டேன்' என்றேன். மனுசன் கண்டுக்கவேயில்லை. இங்கிலிபீசுல மூணு வார்த்தை செமையா சொல்லித் திட்டினேன் அவர் காதுபட. சும்மா சொல்லக் கூடாது. கல்லுளி மங்கன். அதுக்கும் அசையவேயில்லை. சீட்டை வாங்கிட்டு நடையைக் கட்டினார். உள்ளே போனால் என் குடும்பத்திற்குப் பக்கத்திலேயே அவர் குடும்பமும் நிற்க, என்னைப் பார்த்ததும் கொஞ்சூண்டு ஒதுங்கிக்கொண்டார்.

எப்படி பணம்,பதவி, படிப்பு, அந்தஸ்து, அது இதுன்னு சொல்லுவாங்களே அதெல்லாம் இருக்கிற ஆளுக கூட இப்படி நடந்துக்கிறாங்கன்னு தோன்றியது.

அதே சமயத்தில, 'இதில என்ன இருக்குன்னு இந்த ஆளு இப்படி நடந்துக்கிறான்; ஒரு நிமிஷம் நான் வாங்கப் போறேன்; அடுத்த நிமிஷம் அவன் வாங்கிட்டு போறதை விட்டுட்டு இப்படி indecent-ஆக நடந்துக்கிறான்' அப்டின்னு அவர் என்னையப் பத்தி நினச்சுக்கிட்டு போவாரில்ல என்றும் தோன்றியது.

ஆமா, அவரா அல்லது நானா ... யாரு நல்லவரு ... யாரு கெட்டவரு..?


*

40 comments:

வால்பையன் said...
This comment has been removed by a blog administrator.
வால்பையன் said...

அடுத்த 300-வது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

அமர பாரதி said...

நல்ல பதிவு தருமி சார்.

//சரி, நம்ம ஊர் மக்கள்தான் இப்படி என்ற நினைப்பில் இருந்த எனக்கு சென்ற வாரம் சென்னை விமான நிலையத்தில் உள்ளே போவதற்கு சீட்டு வாங்குமிடத்தில் இன்னொரு அனுபவம். கூட்டமேயில்லை. ஒருவர் சீட்டு வாங்கிக்கொண்டிருக்கிறார்//

இதற்குக் காரணம் என்று நான் நினைப்பது, "சுய மரியாதை" என்பதை தவறாக புரிந்து கொள்வது மற்றும் மிக மிக மிக குறுகிய மனப்பான்மை. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, எதைக் கேட்டாலும் தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்வது என்று ஒரு சமூக நிலையில் வாழவே முடியாத கொள்கைகளைக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லோரும் ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்கிறார்கள். பத்தாதற்கு சினிமாவும் டீ.வீ சீரியல்களும் இன்னும் உறவுகளின் மென்மையை முழுக்க அழித்து விடும் முடிவுடன் இருக்கின்றன.

Unknown said...

சிறு பையனாக இருக்கும் போது "வக்கில்லாதவன்தான் வரிசையில் நிற்பான்" என்ற எண்ணம் இருந்தது. உங்களை மாதிரி யாராவது நின்றால் "ஒரு பெருசு. லொள்ளு தாங்கலப்பா. கையில குச்சி மட்டும்தானில்ல. கார்வார் தூள் பறக்குது" என கிண்டல் செய்வோம். சில சமயம் அவர் காது படவே.

டில்லியில் ஒரு கல்லூரியில் சேர, இண்டர்வியூக்காக சென்றபோது, பேருந்தில் பயணிக்க மக்கள் வரிசையில் நிற்கும் அழகையும் அதனால் அனைவருக்கும் (அப்போது மொழியறியாத எங்களுக்கும்) ஏற்படும் வசதியையும் உணர்ந்து வெட்கித் தலை குனிந்து சரியானோம்.

G.Ragavan said...

மொதல்ல சொந்த அனுபவம். அப்புறமா.. பதிவுக்குப் பின்னூட்டம்.

சென்னையில அமெரிக்கத் தூதரகத்துக்கு ஒரு வாட்டிப் போயிருக்கேன். விசாவுக்குத்தான். அப்பப் பழைய கம்பெனில இருந்தேன். அங்க டிரஸ் கோடெல்லாம் கெடையாது. ஆகையால டீ சட்டையும் ஜீன்சும் போட்டுக்கிட்டுப் போனேன். போறப்போதான் நினைவுக்கு வந்தது... ஆபீஸ் ஐடி கார்டைக் கொண்டு போகலைன்னு. சரி கழுத.. நடக்குறது நடக்கட்டும்னு போனேன்.

உள்ள பாத்தா பெருங்கூட்டம். மத்த நிறுவனங்கள்ள இருந்து வந்தவங்கள்ளாம் முழுக்கைச் சட்ட.... பேண்ட்டு... டை எல்லாம் கட்டீருந்தாங்க. கழுத்துல ஆபீஸ் ஐடி. அடேங்கப்பாவா இருந்தாங்க. ரொம்ப மரியாதையா பணிஞ்சு பேசுனாங்க.

என்னோட முறை வந்துச்சு. போய் நின்னேன். ரெண்டொரு கேள்விக கேட்டாங்க. பதிலைச் சொன்னேன். கை விரல வெச்சி ரேக பிடிக்கனும்னு சொன்னாங்க. அவரு வலக்கைய வெக்கச் சொன்னா எடக்கைய வெச்சேன். சார்... கவனமா வைங்கன்னு சொன்னாரு. ஷ்யூர்னு சொல்லீட்டு ரொம்பக் கேஷுவலா வெச்சிட்டு பேசாம இருந்தேன். அடுத்த கைய வைங்கன்னு லேசா கடுப்பானாரு. சரின்னு வெச்சேன். சரி.. அந்தக் கவுண்டர் கிட்ட.. சீச்சீ கவுண்டர்ல எல்லாத்தையும் குடுத்துட்டுக் கெளம்புங்கன்னு சொன்னாரு. வந்து பாத்தா.. பாவிப்பயக .. பத்து வருசத்துக்கு அப்பப்ப வந்துட்டுப் போகலாம்னு விசா குடுத்துருக்காங்க. ஹிஹி..ஒரே கொடுமைதான் போங்க.

அங்க ஒரு பய. சின்னப்பய...பள்ளிக்கூடம் முடிச்சிட்டு கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பிச்சிருந்தான். சின்னப்பய. அவனை ஒரு அக்கா... இந்திய அக்காதான்... கொடகொடன்னு கொடஞ்சது. அந்தப் பயலப் பாக்கப் பாவமாயிருந்துச்சு. என்னாச்சோ தெரியலை.

வெளிய வந்தா போலீசு... சார்.. காசு குடுங்கன்னு....கொடுமைடான்னு நெனைச்சிக்கிட்டேன்.

G.Ragavan said...

// கையில் ஐ-போன்; ஆகவே அமெரிக்காவிலிருந்து வந்தவராக இருக்க வேண்டும். //

ஐ போனு ஒலகமெல்லாம் கெடைக்குதாமே... அவரு இந்தியாவுலயே வாங்கீருக்க மாட்டாரோ? ;)

ஆனாலும் நீங்க சொல்ற மாதிரி நடக்க வாய்ப்பிருக்கு. :)

// இங்கிருந்து செல்லும் பெற்றோர்கள் அங்கே இருப்பது ஒரு golden cage-ல் இருப்பது போன்று என்று கேள்விப்பட்டிருக்கிறேன். //

கிட்டத்தட்ட உண்மைதான்னு நெனைக்கிறேன். எங்கப்பாம்மா இங்க வந்தப்ப.... பகலெல்லாம் வீடுதான். சாந்தரம் நான் வந்தாத்தானே பேச்சுத் தொணைக்கு. ஆனா அவங்களா பக்கத்துல கடைக்கிப் போயி ஒரு கிலோ வெங்காயம் ஒரு நாளைக்கி... பாலு இன்னோரு நாளைக்கி..... இப்பிடி ஒவ்வொன்னும் ஒவ்வொரு நாளைக்கு வாங்கீட்டு வருவாங்க. ஐரோப்பாவுல போக்குவரத்து வசதி நல்லாருக்குறதால...கார் எதிர்பாக்காம அவங்களா அங்கிட்டும் இங்குட்டும் போய்ட்டு வர முடிஞ்சது. ஒரு வாரயிறுதி விட்டு இன்னொரு வாரயிறுதீல ஏதாச்சும் பக்கத்து நாட்டுக்குப் போயிட்டு வந்தோம். அதுவும் பொழுதுபோக்குதானே. என்ன... போன எடத்துல சாப்பாடு பிடிக்கலை அவங்களுக்கு. அவங்க ஒழுங்காச் சாப்பிடாததப் பாத்து எனக்குக் கோவந்தான் வந்துச்சு. ஏதாச்சும் இந்திய உணவு விடுதி கண்ணுல பட்டா கூட்டீட்டுப் போயிருவேன். இத்தாலீல...பிசா-வுல... அருமையான இத்தாலிய பாட்சாக்கள்ளாம் வேண்டாம்... பாகிஸ்தானி உணவகத்துலதான் சாப்பிடனும்னு அடம். அங்கதான் சோறு கெடைக்குதாம். நம்மூரு சுவையாவும் இருக்குதாம். கோழிய அறுத்து அறுத்து டோனேர் கபாப் போட்டு சோத்தோட வெச்சிக் குடுத்தது ரொம்பப் பிடிச்சிருச்சு அப்பாக்கு. ஆனா.. இந்தியாவுலன்னா...நார்த் இண்டியன் சாப்பாடெல்லாம் ஆகாதுன்னு சொல்வாங்க. :)

நிகழ்காலத்தில்... said...

\\அதே சமயத்தில, 'இதில என்ன இருக்குன்னு இந்த ஆளு இப்படி நடந்துக்கிறான்; ஒரு நிமிஷம் நான் வாங்கப் போறேன்; அடுத்த நிமிஷம் அவன் வாங்கிட்டு போறதை விட்டுட்டு இப்படி indecent-ஆக நடந்துக்கிறான்' அப்டின்னு அவர் என்னையப் பத்தி நினச்சுக்கிட்டு போவாரில்ல என்றும் தோன்றியது\\

அப்படிதான் உலகம் இருக்குது.

துளசி கோபால் said...

ரொம்ப interesting ஆன பதிவு.

மனிதர்களைக் கவனிப்பதைவிட வேறு 'சுவாரஸியமான' விஷயமும் உண்டோ (இவ்வுலகில்)!!!!

எங்க ஊருக்கு வாங்க தருமி. நம்மூட்டுலேபேபி ஸிட் பண்ண வேணாம்:-)))))

இந்த ஏடிஎம் வரிசையில் ஒரு நாள் சென்னையில் நின்னுக்கிட்டு இருந்தேன். சின்னதா ஒரு அறை. ரெண்டு பேர்தான் நிற்க முடியும். நான் ரெண்டாவதா நிக்கிறேன்.

அந்த ஆளு என்ன சொன்னார் தெரியுமா?

'அந்தப் பக்கம் திரும்பி நில்லு. நான் பின் எண் போடணும்'

நான் ' ஙே' என்று விழித்தேன்!!!!!

ஜோ/Joe said...

//அதென்னமோ இந்த மாதிரி ஆட்களைக் கண்டால் அப்படி ஒரு எரிச்சல். இதில் என்ன வயித்தெரிச்சல் என்றால், வயசு, படிப்பு, சமூக நிலை இதுபோன்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் நிறைய மனிதர்களை இப்படிப் பார்க்க முடிகிறது.//

உண்மை .இவர்களைப் கண்டால் நான் முணுமுணுத்துக்கொள்வது "சே ..ரொம்ப குஷ்டம் ..சீ ..கஷ்டமப்பா".

சாலிசம்பர் said...

எதார்த்தவாதி வெகுசன விரோதி.அதனால நீங்க ரொம்ப கெட்டவர்.

தருமி said...

வால்ஸ்,
தப்பா ஓரிரு நிமிடங்களுக்கு மட்டுமே வெறும் 299 என்ற எண்ணை பதிவிட்ட அந்த சின்ன சைக்கிள் கேப்ல எத்தனை எத்தனை பின்னூட்டம் போட்டுட்டீங்க'ப்பா.

நன்னி ...

அடுத்த பதிவுக்கு வந்து மறுபடியும் வாழ்த்திட்டு போங்க ..

தருமி said...

அமரபாரதி,
/எல்லோரும் ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்கிறார்கள். //

வரிசையில் நிக்கிறதுக்கு இதெல்லாமா காரணமா இருக்கப்போகுதுங்கிறீங்க?

நாம எல்லோருமே என் வேலை முடியணும்; மத்தவனப் பத்தி நானெதுக்குக் கவலைப்படணும் அப்டின்ற நினைப்பிலதான் வாழ்கிறோம். அதனால்தான் இது.

வண்டிகளை நிறுத்தும்போது அதனால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இருக்குமா என்று நாம் யாருமே யோசிப்பதாகத் தெரியவில்லை. கடையோ வீடோ அடுத்த வண்டிகளோ எல்லாத்தையும் அடைத்து நிப்பாட்டும் படித்த மனிதர்களைப் பற்றி என்ன சொல்வீர்கள்? மன அழுத்தமோ, சினிமா டிவியோ இதற்குக் காரணங்களாக இருக்க முடியாது. நாம் வளரும், வளர்க்கப் படும் சூழலும் முறையுமே காரணங்களாக நினைக்கிறேன்.

குழந்தைப் பருவத்திலேயே 'நீ அடுத்தவனுக்கு உபகாரமாக இருக்காவிட்டாலும் உபத்திரவமாக இருக்க உனக்கு எந்த வித உரிமையுமில்லை' என்று வளர, வளர்க்கத் தவறி விடுகிறோம். மொத்த சமூகமே அப்படித்தான். என் வீட்டு விசேஷத்துக்குப் பாட்டு வைத்து ஊரையே அலற வைக்க எனக்கு என்ன உரிமை? யாராவது யோசிக்கிறோமா?

தருமி said...

சுல்தான்,
நானும் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. சின்ன வயதில் இப்போது பேசும் 'தத்துவங்களை' நான் கடைப்பிடித்தேனா என்று.

நீங்கள் சொல்வதுபோல் ஏதோ ஒரு கட்டத்தில் 'சரியாவது'தானே நல்லது. அதனால்தான் விமான நிலையத்து சம்பவத்தில் அவரது வயதைக் குறிப்பிட்டேன். எந்த வயதிலும் திருந்தமாட்டேன் என்று அடம்பிடிக்கிற ஆளுகளை 'அடித்துதான்' திருத்தணும்!

தருமி said...

ஜிரா,
//எங்கப்பாம்மா இங்க வந்தப்ப...//

அதாவது அப்பாவும் அம்மாவும் .. ஏன்னா, நான் என் அப்பாவின் அம்மாவை 'அப்பம்மா' என்றழைப்பேன்!

//ஐரோப்பாவுல போக்குவரத்து வசதி நல்லாருக்குறதால...//

அமெரிக்காவில இருக்கிற கொஞ்ச நஞ்ச வசதிகளைக்கூட இங்கிருந்து செல்பவர்கள் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை போலும். போன மக்கள் சொல்றாங்க அப்படி ..

//இத்தாலீல...பிசா-வுல... அருமையான இத்தாலிய பாட்சாக்கள்ளாம் வேண்டாம்... //
அடடா .. நானெல்லாம் அப்படியெல்லாம் இல்லை சாமி .. be a roman when you are in rome-தான் பிடிக்கும். சோறு என்னைக்கி வேணும்னாலும் சாப்பிடலாமே .. அட அம்புட்டு எதுக்கு.. பக்கத்து மலையாளத்துக்குப் போனா மட்டை அரிசி சாதத்தை ஒரு கை பார்த்துர்ரதில்ல ..

தருமி said...

அறிவே தெய்வம்,
உங்க பெயரை imposition எழுதணும்னு தோணுது ..

தருமி said...

துளசி.
அப்பாடி ஒரு ஆள் கிடைச்சீங்க. முதல்ல இந்த ' ஙே' -வை எப்படி எழுதுறது /டைப்றது அப்டின்னு சொல்லித்தாங்க. C& P வேலையா? இல்லியே ..அதுவும் முயற்சி பண்ணிட்டேனே!!

//எங்க ஊருக்கு வாங்க தருமி. நம்மூட்டுலேபேபி ஸிட் பண்ண வேணாம்:-)))))//
விரைவில் நிலைமை மாற வாழ்த்துக்கள்!!

தருமி said...

ஜோ,
நான் முணுமுணுக்கிறதே இல்லை. frontal attack தான்!

TBR. JOSPEH said...

அது சரி. நீங்க எதுக்கு தேவுடு காத்தீங்க? அத சொல்லவே இல்லையே.

விசாவுக்கா இல்ல 'இப்படி' வேடிக்கை பாக்கவா?

இந்த மாதிரி க்யூவ ஜம்ப் பண்ற ஆளுங்களோட நானும் முந்தியெல்லாம் சண்டை போடுவேன். இப்பல்லாம் 'போய் தொலைங்கடா'ன்னு விட்டுருவேன்.

இப்ப சென்னையிலதான் இருக்கீங்களா?

தருமி said...

ஜாலிம்பர்,

வெகுசன விரோதி - இது மிகச்சரி.

தருமி said...

டி.பி.ஆர்.,

//அத சொல்லவே இல்லையே.//
இல்லியே, சொல்லியிருக்கேனே!!

//இப்பல்லாம் 'போய் தொலைங்கடா'ன்னு விட்டுருவேன்.//
நானும் அப்படி இருக்கணும்னுதான் நினைக்கிறேன். முடியலைங்களே .. :( ஆமா, உங்க வயசு என்ன?


//இப்ப சென்னையிலதான் இருக்கீங்களா?//இல்லைங்க...மருதைக்கு வந்தாச்சு ..

தருமி said...

டி.பி.ஆர்,
என்ன தம்பி ... நீங்கதானா அது...வெறும் இனிஷ்யலோடு நின்னுட்டீங்களா ... கொஞ்சம் சந்தேகமாப் போச்சு.

எப்படி இருக்கீங்க? 'பாத்து' நாளாச்சு ..

Ganesan said...

அந்தப் பக்கம் திரும்பி நில்லு. நான் பின் எண் போடணும்'


super amma

TBR. JOSPEH said...

என்ன தம்பி ... நீங்கதானா அது...வெறும் இனிஷ்யலோடு நின்னுட்டீங்களா ... கொஞ்சம் சந்தேகமாப் போச்சு.//

நானேதான். வில்லங்கமான பதிவு எழுதி எங்க ஆட்டோ கீட்டோ வந்துருமோன்னு பயம். அதான் ப்ரொஃபைல கூட மறைச்சிருக்கேன். புகைப்படத்தையும் காணோம், பாருங்க :-))

எப்படி இருக்கீங்க? 'பாத்து' நாளாச்சு ..//

நல்லாருக்கேன். இன்னும் பத்து மாசம். அப்புறம் ரிட்டையர்மெண்ட்.
சென்னையா தூத்துக்குடியா இல்ல மதுரையான்னு இன்னும் தீர்மானிக்கல. ரெண்டு மாசத்துக்கு முன்னால மதுரை நாகமலை புதுக்கொட்டைக்கு ஒரு திருமணத்துக்கு வந்திருந்தேன். இடம் ரொம்ப புடிச்சிருந்தது. அந்த பக்கமே ஒரு வீட்ட வாங்கி செட்டில் ஆய்ட்டா என்னன்னு தோனுச்சி. பார்ப்போம். இறை சித்தம் எப்படியோ... சாரி, இத உங்கக்கிட்ட சொல்லக் கூடாதே:))

Thekkikattan|தெகா said...

எப்பொழுதும் போலவே இந்தப் பதிவும் பயனுள்ள பதிவு. இப்போ கூட நான் அப்பா'ம்மாவை இங்கு அழைத்து வரலாம் என்று மிகவும் ஆசைப் படுகிறேன், ஆனால் அவர்களின் "பொன்கூண்டு" எஃபெக்ட்ட நினைச்சா பாவமா இருக்கு.

இந்த "பேபி சிட்டிங்" நடைமுறையை கடைபிடிக்கக் கூடாதுன்னுதான் நானே துணைவியாருக்கு பிரசவ நோரத்தில கூட தனியாவே நின்னு செஞ்சுக்கிட்டேன். இப்போ, பொண்ணு டெர்ப்ல் இரண்டை நோக்கி போய்க்கிட்டு இருக்காளா கூட்டிவந்து காமிக்கலாமேன்னு... இருந்தாலும் - wild birdsயை சிறை பிடிக்கிறமாதிரி தோனுது :-( .

Thekkikattan|தெகா said...

எப்படியோ, கீழே உள்ள உங்க பின்னூட்டம் ஒட்டு மொத்த நம்ம சமூகத்தின் அடையாளம், புரையோடிப் போச்சோ...!

//குழந்தைப் பருவத்திலேயே 'நீ அடுத்தவனுக்கு உபகாரமாக இருக்காவிட்டாலும் உபத்திரவமாக இருக்க உனக்கு எந்த வித உரிமையுமில்லை' என்று வளர, வளர்க்கத் தவறி விடுகிறோம். மொத்த சமூகமே அப்படித்தான். என் வீட்டு விசேஷத்துக்குப் பாட்டு வைத்து ஊரையே அலற வைக்க எனக்கு என்ன உரிமை? யாராவது யோசிக்கிறோமா?//

இந்த மைக் செட் அலறல் பெரும் கொடுமை தருமி... சில சமயம் ஒரு வாரத்திற்கும் தொலை பேசக் கூட முடியாது எல்லா கதவுகளையும் அடைத்துக் கொண்டு பேசினாலும் சப்தமாக இருக்கும், பிறகு இரவுத் தூக்கத்தைப் பற்றி சொல்லவும் வேணுமோ ... கொடுமை, கொடுமை.

அத்திரி said...

ஏகப்பட்ட கதை கரு கிடச்சிருக்கு போல............

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த ரெண்டு அனுபவமுமே எனக்கும் இருக்கு.. நானும் இப்படி பலரை அவங்க எதுக்காக விசா வாங்க வந்திருப்பாங்கன்னு யோசிச்சேன்.. ஆனா கதையெல்லாம் எழுத வரலை.. :)

அந்த வரிசை விசயம் அடிக்கடி சண்டை போடுவேன்.. நீங்க சொன்னமாதிரியே தான் அவங்களும் உனக்கப்பறம் போறேன்னோ.. இல்லாட்டி இப்ப என்ன ஆகிடும் 5 நிமிசம் இடைவெளியில் நீ வாங்கினான்னு சொல்வாங்க..
இதுல என்ன கொடுமைன்னா அவங்க இப்படி குறுக்குவழியில் செயிச்சதை அவங்க பிள்ளைங்க முன்னாடி வீரமா சிரிச்சிக்கிட்டே போவாங்க.. எனக்கு அவன் செய்தது கூட பெரிசா படலை.. அவன் பிள்ளைங்க ரெண்டுபேரையும் அந்த வழிக்கு உட்படுத்தறானேனு தான்.. :(

சுல்தான் சொல்வது போல நான் தில்லியில் எங்கேயும் வரிசை பார்த்ததே இல்லை.. எல்லா ஆளுங்களும் குறுக்குவழி தேடுபவங்கள் தான்.. அவர் எந்த வருசம் பாத்தாரோ .. மு ம்பையில் அந்த சிஸ்டம் இருப்பதா கேள்வி பட்டேன்..

நாகை சிவா said...

Interesting இருக்கு இந்த பதிவு

சுவாரஸியமான இருக்கு!

வேடிக்கை பார்ப்பது என்பது ஆர்வம் தரும் ஒரு விசயம் தானே!

வரிசையில் நம்மளை மீறி போவர்களை தடுத்து கேட்டால் சில சமயம் சண்டைக்கு வேற வருவார்கள். தானா திருந்துனா தான் உண்டு... இல்ல ஒரு வேளை நம்மள பாத்தவுடன் இந்த கேணையன் தானே நிக்குறான் என்றே முந்தி போகிறார்களோ என்னவோ?

வோட்டாண்டி said...

ஆயிரம் தான் இருந்தாலும் வரிசைல நிக்காம அடிச்சி புடிச்சி டிக்கெட் வாங்குறதுல இருக்குற சுகமே தனி...

ஒரு வாட்டி தாம்பரம் ரயில் நிலையத்துல டிக்கெட் வாங்க பெரிய வரிசை இருந்துச்சு..அப்பா ஒரு அம்மா அவங்களோட சின்ன பையன் கிட்ட காசு குடுத்து(அங்க பெண்களுக்கு தனி வரிசை கிடையாதே) வரிசைய மீறி டிக்கெட் வாங்க சொன்னாங்க..அந்த பையனும் முடிஞ்சா அளவுக்கு முயற்சி பண்ணி திட்டு வங்கி கடைசீல டிக்கெட் வாங்கிட்டான்.

இப்படி பெற்றோர்களே குழந்தைகள தவறு செய்ய தூண்டும்போது...அடுத்த தலைமுறை திருந்துமா என்ன?

துளசி கோபால் said...

இந்த ' ஙே' வுக்குப் பின்னாலே நானும் ஓடி ஓய்ஞ்சுபோயிட்டேன். அப்புறம் நம்ம சிவ முருகன், பராஹா வில் இதைத் தட்டச்சுச் செய்யலாமுன்னு சொல்லிக் கொடுத்தார். அதையும் இறக்கி வச்சுக்கிட்டேன். அதுலே மட்டும் இந்திய மொழிகள் 11 தட்டச்சலாம்.

இந்த ' ஙே' வுக்காக ஒவ்வொருமுறையும் பராஹா திறக்க சோம்பல். எனக்கு வாழைப் பழம் உரிச்சுக் கொடுக்கணும். சுலபவழியா ஒரு ங் முதல் ¦¹ª வரை அடிச்சு ஒரு காபி எடுத்து நோட்பேடில் சேமிச்சுவச்சுருக்கேன்.

வேணும்போது ' ஙே' ன்னு மிழிக்காமல் காபி & பேஸ்ட் செஞ்சுக்குவேன்.

இதோ நான் பெற்ற இன்பம் உங்கள் அனைவருக்கும்.


ங்

ஙா
ஙி
ஙீ
ஙு
ஙூ
ஙெ
ஙே
ஙை
ஙொ
ஙோ
ஙௌ

cheena (சீனா) said...

ஆகா ஆகா - தருமி அண்ணே !

கண்ணெத் தொறந்து வச்சிக்கிட்டா - பதிவு எழுதறது ரொம்ப ஈஸி போல இருக்கே !!

அய்யோ தூள் கெளப்புறீங்க

299 ஆயிடுச்சா - ம்ம்ம் - 300 வது பதிவு ஏப்ரல் 15க்கு - தமிழ்ப் புத்தாண்டில் போடுவீங்களோ ( புரியுதா அண்ணே - வெயிட் பிளீஸ் )

அப்புறம் இன்னிக்கு MRC லே பாக்கலாம்
நாங்களும் பேபி சிட்டிங்குக்கு போனோம்ல - போப்போறம்ல

விசா இண்டெர்வியூ மாதிரி கொடும கிடையாதுன்னு எல்லோருமே சொல்றாங்க

வரிசை தவறுபவர்களைத் திட்டி சண்ட போடறது என் பழக்கம் - வாங்கிக் கட்டிக்கிட்டதும் உண்டு - எங்க தங்க்ஸ் சண்டக்கோழின்னு சொல்வாங்க

ஆமா இதென்ன மறுமொழியா - இல்ல பின்னூட்டமா .......

வரட்டா அண்ணே

தருமி said...

டி.பி.ஆர்.,
//இடம் ரொம்ப புடிச்சிருந்தது. அந்த பக்கமே ஒரு வீட்ட வாங்கி செட்டில் ஆய்ட்டா என்னன்னு தோனுச்சி..//

ஆஹா ... வந்திருங்க. flat பாத்திருவோமா ?!

தருமி said...

காவேரி கணேஷ்
நன்றி வந்தமைக்கு.

தருமி said...

தெக்ஸ்,
//- wild birdsயை சிறை பிடிக்கிறமாதிரி தோனுது //

பேத்தியப் பாக்க ரொம்பல்ல ஆசைப்படுவாங்க .. அதுக்காகவாவது...

தருமி said...

அத்திரி,
கரு என்ன மாதிரி மொடாக்குகளுக்குக் கிடச்சி என்ன பயன் சொல்லுங்க .. அப்பப்ப abort ஆயிறுதில்ல :(

சுஜாதா கதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருது. ஒரு நாள் தினசரியில நாலுபேரு செத்தது பற்றி வேறவேற செய்தியா வந்திருக்கும். அதை வைத்து நாலு பேரு வாழ்க்கையில நடக்கிறதுமாதிரி ஒரு கதை எழுதியிருப்பார். creativity வேணுமே .. அது எங்க கிடைக்கும்னு தெரிஞ்சா சொல்லுங்க!

தருமி said...

முத்துலெட்சுமி-கயல்விழி,
//...அவங்க இப்படி குறுக்குவழியில் செயிச்சதை அவங்க பிள்ளைங்க முன்னாடி வீரமா சிரிச்சிக்கிட்டே போவாங்க..//

அதுலயும் பிள்ளைங்கள இருசக்கர வண்டியில வச்சிக்கிட்டே சிக்னலில் ஜம்ப் பண்ற கேசுகள், கைப்பேசியில் பேசிக்கிட்டு போற ஜென்மங்களப் பார்த்தா பத்திக்கிட்டு வரும்.

என்னங்க இது? தில்லியில் கூட வரிசையா நிக்க மாட்டாங்களா? ஆச்சரியமால்ல இருக்கு..நானும் ஏதோ எங்க ஊர்க்கார மக்க மட்டும்தான் இப்படின்னு நினச்சேன் ..

//ஆனா கதையெல்லாம் எழுத வரலை.. :)//
அதாங்க..அப்படி ஏதாவது முயற்சி பண்ணலாமான்னு ஒரு ஆசை வந்திச்சி...ஆனா .. என்ன பண்றது? இதுக்கு முந்தின பின்னூட்டம் வாசிச்சிக்கிங்க...

தருமி said...

சிவா,
//நம்மள பாத்தவுடன் இந்த கேணையன் தானே நிக்குறான் ..//

அதுக்கு சான்ஸ் இல்லையே .. நீங்க பாக்கிறதுக்கு என்னை மாதிரியா இருக்கீங்க?!

interesting=சுவாரஸ்யம் .. ம்ம்ஹும்..தமிழில் ஒரு சொல் சொல்லுங்க

தருமி said...

வோட்டாண்டி,
//அடுத்த தலைமுறை திருந்துமா என்ன?//

இந்த தலைமுறையே இப்படி சந்தேகப்பட்டால் எப்படி? மாறுங்க .. மாத்துங்க'ப்பா.

சென்னையில் மற்ற இடங்களில் எப்படியோ ATMகளில் ஒழுங்கா வரிசையில நிக்கிறாங்க.

தருமி said...

துளசி,
டீச்சர்னா டீச்சர்தான்.

டீச்சரிடம் இன்னொரு ஐயம்:

அது சரி, ங்,ங,ஙே (இது ராஜேந்திர குமார் அல்லது அந்த மாதிரி சின்ன நாவல்கள் எழுதிற ஆளு ஆம்பிச்சதுல்ல?) இதைத் தவிர நீங்கள் தந்துள்ள எழுத்துக்கள் எப்பப்ப பயன்படும்?

தருமி said...

சீனா,
// எங்க தங்க்ஸ் சண்டக்கோழின்னு சொல்வாங்க //

இங்கேயும் நிலைமை அதுதான். அதுக்கே ஒரு சண்டை வரும்...especially இருசக்கர வண்டியில் போகும்போது ..

Post a Comment