Friday, June 15, 2012

574. THE GNOSTIC GOSPELS ... 2

*
*

*

THE GNOSTIC GOSPELS



மற்ற  பதிவுகள்: 

.....................   முதல் பதிவு
.....................   இரண்டாம் பதிவு 
.....................   மூன்றாம் பதிவு  
 ...................     நான்காம் பதிவு 
....................    ஐந்தாம் பதிவு 
....................   ஆறாம் பதிவு
....................    இறுதிப் பதிவு 


THE CONTROVERSY OVER CHRIST'S  RESURRECTION:

HISTORICAL EVENT OR SYMBOL?



ஏசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார். இதுவே - orthodox Christians - பழமைக் கிறித்துவத்தின் மிக முக்கியமான, அடிப்படையான நம்பிக்கை. (3)

கி.பி. 190 வருடத்து அறிஞர் டெரூலியன் (Terrullian) இதைப் பற்றிச் சொல்லும் போது, ‘இது மிகவும் முட்டாள் தனமானது; ஆனாலும் இதை நம்பியேயாக வேண்டும்'  என்கிறார்.

ஆனால் heretics என்றழைக்கப்படுவோர் இதனை நம்புவதில்லை. இதைப்பற்றிச் சொல்லப்படுவதையெல்லாம் அப்படியே எழுத்துக்கு எழுத்து நம்ப வேண்டியதில்லை என்பர்.  Gnostic Christians இந்நிகழ்வை பல்வேறு விதமாக உருவகப்படுத்துவார்கள். இதை ஊனோடும் உயிரோடும் தொடர்புபடுத்தாது, ஆன்மாவோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் என்பார்கள். ஆனால் டெரூலியன் இந்த நம்பிக்கையில்லாதவர்கள் கிறித்துவர்களாக இருக்க முடியாது; அவர்கள் எல்லோருமே பதிதர்கள் என்கிறார்.(5)

லூக, மார்க் இருவரும் ஏசு வேறு உருவத்தில் தங்களிடம் வந்ததாகச் சொல்கிறார்கள். ஜானின் கூற்றும் இவ்வாறேயுள்ளது. மரி மக்தலேனா கல்லறையின் முன் ஒரு தோட்டக்காரர் இருப்பதாகத்தான் முதலில் நினைக்கிறார். பால் ஏசுவின் குரலை கேட்டது இருவேறு விதமாகக்  கூறப்படுகிறது. பால், ஏசுவின் மீள் உயிர்ப்பு ஒரு மர்மம் ( a mystery) என்கிறார்.

புதிய ஏற்பாட்டில் உள்ள வசனங்கள் பல்வேறு மாறுபட்ட விளக்கங்களுக்கு உரியதாக இருந்தும், ஏன் பழமைக் கிறித்துவர்கள் (Orthodox Christians) அவைகளை ஒரு புறம் தள்ளி, ஏசு மீண்டும் உயிர்ப்பித்தார் என்பதை மட்டும் வலியுறுத்துவது ஏன்? இக்கேள்விக்கு என்னால் முழுமையாகப் பதில் சொல்ல முடியாது. இருப்பினும் இது நிச்சயம் அரசியல் காரணங்களால் மட்டுமே என்று சொல்ல முடியும்.  பீட்டர் போன்றவர்கள் கிறித்துவத் தலைமைக்கு உரிமை கோர வழி வகுக்கும் அரசியல் காரணத்திற்காகவே இந்த நம்பிக்கை வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். (6)

இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிறித்துவத் தலைமை இன்றுவரை நீடிப்பதற்கு இந்த நம்பிக்கையும் ஒரு காரணம். Gnostic Christians இந்த நம்பிக்கையிலிருந்து மாறுபடுவதால் அவர்கள் தலைமைப் பதவிக்கு வருவதற்கான வழிகள் அடைபடுகின்றன. அவர்கள் பழமைக் கிறித்துவர்களோடு (Orthodox Christians) போட்டியிட்டாலும், அவர்கள் நம்பிக்கையற்றவர்கள் - heretics - என்றே கருதப்படுகின்றனர்.

அரசியலும் மதமும் இணைந்தே முதலிலிருந்து செயல்பட்டு வந்துள்ளன. வெவ்வேறு விதமான கிறித்துவம் கிளைத்திருந்திருக்கின்றன. ஒருகுழு மற்றொரு குழுவைத் தாக்கி வந்துள்ளன. (7)

மரிய மக்தலேனா  உயிர்த்தெழுந்த ஏசுவை முதலில் பார்த்தார். இருப்பினும் பீட்டரே முதலில் பார்த்ததாகத்தான் இன்றுவரை பழமைக் கிறித்துவர்களும், சில பிரிவினைச் சபைகளும்  தொடர்ந்து சொல்லி வருகின்றன. ஏனெனில் பீட்டர் முதல் பிஷப் (போப்) ஆவதற்கான அடிப்படையே ஏசுவை முதலில் அவர் பார்த்தார் என்பதே ஒரு காரணமாகப் போயிற்று. இரண்டாம் நூற்றாண்டில் ஏசுவின் சகோதரர் ஜேம்ஸ் முதலில் ஏசுவைப் பார்த்தார் ( மரிய மக்தலேனா அல்ல.) என்று சொல்லப்பட்டது. (8)

கார்ல் ஹோல் - "Karl Holl - என்ற ஜெர்மானிய அறிஞர் உயிர்த்த ஏசுவைப் பார்த்தவர்கள் பட்டியலே மத ஆளுமைக்குக் காரணமாயிற்று என்கிறார். இந்தக் காரணம் இந்த 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாகவும் சொல்கிறார். பழமைக் கிறித்துவர்கள் இதில் மிகவும் தொடர்ந்த ஒரு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார்கள். இன்றைய போப் தான் ஏசுவை முதலில் பார்த்த பீட்டரின் வாரிசு என்ற உரிமையோடு உள்ளார். (10)

ஆனால் Gnostic Christians இந்த நம்பிக்கையில்லாமல் இருப்பதோடன்றி, இந்த நம்பிக்கையை ‘முட்டாள்களின் நம்பிக்கை’ -faith of the fools - என்கிறார்கள். ஏசு உயிர்த்தார் என்பதை ஆன்மிகப் பார்வையில் பார்க்க வேண்டும். அதை உடல் தொடர்பாக நினைக்கக் கூடாது.

நாக் ஹம்மாதி கண்டுபிடிப்புக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட Gospel of Mary என்ற gnostic பிரதிகளில் ஏசுவின் உயிர்ப்பு கனவில் அல்லது வலிப்பின் பிரம்மையில்  - visions received in dreams or in ecstatic trance - கிடைத்தவைகளே என்று சொல்லப்பட்டுள்ளது. (11)

நாக் ஹம்மாதி பிரதிகளில் ஒன்றான பிலிப்பின் விவிலியம் ஏசுவின் உயிர்ப்பை நம்பும்  கிறித்துவர்களைக் கேலி செய்கிறது. (12)

பழமைக் கிறித்துவர்களின் ஒரு பெருந்தலைவர் ஐரீனியஸ் - Irenaeus  -  நான்கு விவிலியங்களும் அந்தந்த ஏசுவின் சீடர்களால் எழுதப்பட்டது என்று நம்புகிறார். ஆனால் மாத்யூ, மார்க். லூக், ஜான் இவர்களைப்பற்றிய வரலாறு  ஏதும் நமக்குத் தெரியாது. (17)

gnostic பிரதிகளின் ஆசிரியர்கள் பன்னிரண்டு சீடர்களைத் தாண்டியுள்ள மற்றவர்களையே அதிகமாகக் குறிப்பிடுவார்கள். அவர்கள் - பால், மேரி மக்தலேன், ஜேம்ஸ். இவர்கள் பீட்டரையும் சேர்த்த அந்தப் பன்னிருவருக்கும்   gnosis கிடைத்ததாகக் கருதுவதில்லை.

Gospel of Mary சீடராகக் கூட கருதப்படாத மேரி மக்தலேனாவிற்கே கடவுளின் காட்சி கிடைத்ததாகவும், பீட்டரை விட இவருக்கே அதிக ஞானம் கிடைத்ததாகவும் கூறுவர். Dialogue of Savior நூலில் இவருக்கே முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது. மற்ற சீடர்களை விடவும் இவரே மிக மேம்பட்டவர் என்றும் கூறுகிறது.  இவர் ‘எல்லாம் தெரிந்தவர்’ என்று - " woman who knew the All
"  அழைக்கிறது. (22)

Gnostic கருத்துக்களில்  ‘ஆன்மா’ ஒரு மனித உடலில் தங்கியிருப்பதாகக் கருதப்படுவதுண்டு. உடல் ஒரு கருவியாக இயங்குகிறது. இந்தக் கருத்துக்கள் கிரேக்க தத்துவ வழக்கங்களுக்கு மிக அருகில் இருப்பதாகக் கருதப்படுவதுண்டு. அதோடு, இந்து, புத்த வழக்கங்களுக்கும் மிக அருகாமையில் இருப்பதாகக் கருதுவதுண்டு. (27)












 *

10 comments:

சார்வாகன் said...

வணக்கம் அய்யா,
நல்ல பதிவு,
ரெஃபெரென்ஸ் எண்களை மட்டும் இட்டால் எப்புடி?அதன் மூல தகவல்களையும் அளியுங்கள்.கொஞ்சம் கற்றுக் கொள்ள‌ ஏதுவாக இருக்கும்

1)பால் இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்ததாக் கூறப்படும் சம்பவங்களை தன் கடிதங்களில் கூறுவது இல்லை. 2) பாலின் கடிதங்கள் சுவிசேஷங்களுக்கு முந்தையவை என்ற இரு கருத்துகளே கிறித்தவத்தை மிகுந்த சிக்கலுக்கு உள்ளாக்கும் விடயம் என்பது நம் கருத்து.

இந்த [மலிவு விலை!]தள்ளுபடி ஆகமங்கள் குறித்து நல்ல புத்தகம் பரிந்துரைத்தால் மகிழ்சி
நன்றி

தருமி said...

இடப்பட்டிருக்கும் எண்கள் பக்கங்களின் எண்கள். சில முக்கியமாக எனக்குத் தோன்றும் வாக்கியங்களைத் தொகுத்துள்ளேன்.

DEVAPRIYA said...

பவுல் பெயரில் உள்ள 14 கடிதங்களில் 6 மட்டுமே அவருடயவை; 50 -60ல் வரையப்பட்டவை-என்பது பெரும்பாலோனோர் கருத்து. மாற்கு சுவி கதை 70-75. பவுல் கூறும் சொல் பயன்படுத்திய விதம்-1கொரிந்தியர் 15:.3 நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து,4 அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்.5 பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார்.6 பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்: சிலர் இறந்து விட்டனர்.7 பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.8 எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

பெற்று கொண்டதும்- நேரடியானது அல்ல. மேலும் பவுல் பெற்றது ஒரு காட்சி- விஷன் என்கின்றனர். மேலும் பவுலின் அடிப்படை

1கொரிந்தியர் 15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்: நாம் யாவரும் சாகமாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.

மாற்கு கடைசி அதிகாரம் 16: 1 -8 வாக்கியங்களுடன் பெரும்பாலான சுவடிகள் முடிகின்றனர். உ-ம்- வேடிகனஸ், சினைடிகஸ் இவை 4-5ம்
நூற்றாண்டினது எனப்பட்டாலும் இதே சுவடிகளில் மேல் திருத்தம் 11ம் நூற்றாண் வரை செய்யப்பட்டுள்ளது.
அவைகள்
மாற்கு 16:7 நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ' உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள் ' எனச் சொல்லுங்கள் ' என்றார்.8 அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள். என்பதுடன் முடிகிறது.

மாற்கில் யாருக்குமே காட்சியே கிடையாது. ஆனால் இறந்த மனிதர் ஏசு முன்பே கலிலேயா சொல்ல சொன்னதாக ஒரு கதை. இதையே மத்தேயு நீட்டி கலிலேயா மலையில் ஒரு காட்சி என கதை வளர்ந்தது. லூக்காவோ ஈஸ்டர் ஞாயிறு அன்றே காட்சி பின் வான் சென்றதாகக் கதை. இதே லூக்கா கதாசிரியர் இக்கதையை அப்போஸ்தலர் நடபடிகளில் மாற்றுகிறார். அதே போல பவுலை ஏசு மாற்றியதான கதை.
அப்போஸ்தலர் 9:7 அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர்.8 சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை.
22:7 9 என்னோடிருந்தவர்கள் ஒளியைக் கண்டார்கள்: ஆனால் என்னோடு பேசியவரது குரலைக் கேட்கவில்லை.
http://devapriyaji.activeboard.com/t49443203/topic-49443203/
http://devapriyaji.wordpress.com/2012/04/02/jesus-resurrection-myth/
இவை அனைத்தையுமே ஆராய்ந்தால் ஒரு புரளி, தூக்குமரத்திலிருந்து இறக்கப்பட்டபோது ஏசு இறக்கவில்லை என்பது உயிர்த்தார் என்பதாக புனையப் பட்டிருக்க வேண்டும். பவுல் தன் வாழ்நாளில் இரண்டாவது வருகை உலகமுடிவை நோக்கினார்.
ஏசு தன் வாழ்நாளிலேயே உலக அழிவை சொன்னார்.

தருமி said...

//ஏசு தன் வாழ்நாளிலேயே உலக அழிவை சொன்னார்.//

???????

தருமி said...

//தூக்குமரத்திலிருந்து இறக்கப்பட்டபோது ஏசு இறக்கவில்லை என்பது உயிர்த்தார் என்பதாக புனையப் பட்டிருக்க வேண்டும்//

இந்த theory-யை ஏதோ ஒரு புத்தகத்தில் வாசித்தேன். மயக்கமடைந்த அவரை இறக்கிச் சென்றனர் என்பது போல் வரும். அநேகமாக, MICHAEL BAIGENT எழுதிய
THE JESUS PAPERS என்ற நூலின் 128ம் பக்கத்திலும் இது பற்றிச் சொல்லப்படுகிறது.

DEVAPRIYA said...

//தருமி said...
//ஏசு தன் வாழ்நாளிலேயே உலக அழிவை சொன்னார்.//????//

மாற்கு 9:1 1 மேலும் அவர் அவர்களிடம், ’ இங்கே நின்று கொண்டு இருப்ப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார்.
மாற்கு 13: 29 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.30இவையனைத்தும் நிகழும்வரை இப்பொழுது வாழும் மக்கள் ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.-24 ’ அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
மாற்கு 14: 62 அதற்கு இயேசு, நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் ‘என்றார்
மத்தேயு 10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ’ ‘ பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.7 அப்படிச் செல்லும்போது ‘ விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ‘ எனப் பறைசாற்றுங்கள்.
.23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
http://devapriyaji.wordpress.com/2012/05/13/jesus-or-mohammad/
MICHAEL BAIGENT மற்றும் டாவின்சி கோட் -இவை மேலும் நீட்டி ஏசு வம்சம் வாழ்கிறது என நீட்டினர். இவை எல்லாம் ஊக நீட்டல்களே. கல்லறை எங்கே என்பது கான்ஸ்டன்டை அம்மா ஹெலனா காட்டும் வரை தெரியாது. எனவே காட்சி- காலி கல்லறை- மக்தலேனாவிற்கு காட்சி- மற்றவர்களுக்கு காட்சி எல்லாமெ வெறும் புரளிகளே.
http://devapriyaji.wordpress.com/2012/04/02/jesus-resurrection-myth/

அ. வேல்முருகன் said...

இருத்தலே ஆன்மாவின் உண்மை. ‘நான் ஆன்மாவை அறியேன்’ என்றோ ‘நான் ஆன்மாவை அறிந்தேன்’ என்றோ சொல்வது பொருந்தாது. ஏனென்றால் தன்னைத் தனக்கு அறிபடு பொருளாக்குவதனால் இரண்டு பொருள் இருப்பதாக ஆகிவிடும்

இது ஒரு இந்து ஆன்மிக விளக்கம்

அதுபோல கிருத்துவத்திலும் இருப்பதாக ஒரு கருத்து இதில் உள்ளது

உண்மையில் ஆன்மா என்பது என்ன

எங்கே இருக்கிறது, என்ன செய்கிறது சரி மனிதன் மரணமடைந்தால் என்ன செய்யும்

இதற்கு தங்கள் கருத்து

shakiribnu said...

http://www.jesuspuzzle.humanists.net/

இந்த பக்கத்தை பார்த்துகொள்ளுங்கள். இது புத்தகமாக வெளிவந்துள்ளது.

கருப்பையா said...

உண்மையாக ஏசு என்ன சொன்னார் என தேடியோர் பெற்ற முடிவு தான் புதிய ஏற்பாடு நம்ப்பிக்கைக்கு உரியது இல்லை.

மேலும் கிடைத்துள்ள இந்த ஞான சுவிசேஷங்களில் சில மாற்கிற்கும் முந்தவை. முதலில் எழுதப்பட்ட தாமஸ் சுவி- கிறுஸ்து என்பது ஒரு நிலை-எல்லாரும் கிறிஸ்து ஆகலாம் என்கிறது

வரலாற்று உண்மையா என ஆராயலாம்.

TIMON said...

Each one of us have right to have their own religion & to follow... அது சரி தான் ஆனால் நம் குழந்தைகளுக்கு அதை போதிப்பது தவறு தானே?? உன் நன்பன் ஒரு இந்துவாக இருந்தால் அவன் பாவம் செய்பவன்... நரகம் செல்வான் என்பது, குழந்தைகளை நல்வழி படுத்துவது அல்ல...

Post a Comment