Wednesday, July 09, 2014

773. FIFA 14 அரையிறுதி






*


 அரையிறுதி ஆட்டம் – 1 

ப்ரேசில் - ஜெர்மனி 

 புதன் கிழமை – இரவு 11.26

 நல்ல வேளை … குறும்பன் மாதிரி நாலஞ்சி பேர் நம்ம பதிவை வாசிக்கிறதினால சில நன்மை நடந்திருது. தினசரியில் பார்க்கும் போது வியாழன் அன்று முதல் அரையிறுதி அப்டின்னு பார்த்ததும், வியாழன் இரவுன்னு நினச்சிக்கிட்டு இருந்தேனா … குறும்பன் இன்னும் நாலு மணி நேரத்தில முதல் அரையிறுதி முடிவு தெரிஞ்சிரும்னு சொன்னாரேன்னு நினச்சிப் பார்த்த பிறகு தான் புதன் – வியாழன் இரவில் ஆட்டம்னு தெரிஞ்சுது. நல்ல வேளை .. பொழச்சேன். குறும்பனுக்கு மிக்க நன்றி.

மனசுக்குள்ள ப்ரேசிலும் அர்ஜெண்டினாவும் இறுதிக்கு வந்து அதில் ப்ரேசில் வெல்லணும்னு ஒரு ஆசை ஓடுறதை இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனால் அப்படி நடக்க வாய்ப்பு ரொம்ப ரொம்ப குறைவு. ப்ரேசில் அணி வீர்ரகளுக்கு எப்படியோ … மற்ற எல்லோருக்குமே நெய்சர் விழுந்தது ரொம்ப பெரிய சோகமாகப் போச்சு. வேற எந்த அணிக்கும் இந்த நேரத்தில் மனோ தத்துவ உதவி கொடுக்கவில்லை; ப்ரேசில் அணிக்கு மட்டும் கொடுத்திருக்காங்க. அப்டின்னா அவர்களுக்கு அந்த உதவி தேவைப்படுதுன்னு தான் அர்த்தம். அந்த அளவுக்கு அவங்க morale பாதிக்கப்பட்டிருக்கும்னு தோணுது. அதோடு அந்த அணியின் தலைவர் தியோகோவும் வெளியேற்றப்பட்டிருக்கிறார். அவர் விளையாடும் போது எதிரணி ஆள் தான் foul செய்தது போல் எனக்குத் தோன்றியது. நடுவர் இவருக்கு அட்டை கொடுத்து விட்டார். ஒரு தாழ்ப்பாளுக்குப் பதில் இரட்டை தாழ்ப்பாள் விழுந்தது போல் ஆயிற்று.

இந்த சந்தேகத்தோடு விளையாடும் அணி முழுத் திறமையைக் காண்பிக்க முடியுமான்னு தெரியலை. எதிரணி ஒருமித்த ஒரு அணி. ஏற்கெனவே முல்லர் வேறு நிறைய கவுல் கொடுத்திருக்கிறார். (குறும்பன், கவுல் என்பதை கோலுக்காகப் பயன் படுத்தச் சொன்னீர்கள்; எப்படி … செய்து விட்டேன் பார்த்தீர்களா…?!) தொடர்ந்து நான்காவது முறையாக உலகக்கோப்பைப் போட்டிகளில் அரையிறுதிக்குத் தொடர்ந்து வந்த அணி இது. ஆனாலும் இறுதியில் கோட்டை விட்ட அணி. அந்த வேகமும் அவர்களிடம் அதிகமாக இருக்கும். ப்ரேசிலுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்றால் இவர்களுக்கு இரட்டை உந்துதல் இருக்கும்.

 என் ஆசைப்படி இல்லாமல் ஜெர்மனிதான் இதில் வெல்லும் என நினைக்கிறேன். இறுதியாட்டம் ஜெர்மனி – நெதர்லாந்து என்று தான் நினைக்கிறேன். இந்த முறையும் ஜெர்மனிக்கு ரன்னர் அப் இடம் தான் என்றும் நினைக்கிறேன். ஏன்னா போன உலகக் கோப்பை மாதிரி இந்த முறையும் இதுவரை எனக்கு நெதர்லாந்தின் ராபன் ஆட்டம் தான் மிகவும் பிடித்திருந்தது. பொறுத்திருந்து பார்ப்போம்.

மணி 11.40 

ஆச்சு. மதியம் போட்ட தூக்கம் அனேகமாக விளையாட்டை முழுவதுமாகப் பார்க்கத் துணை செய்யும் என்று நினைக்கிறேன்.

மணி  12.01

 இதுவேறு … வர வர அகலப்பட்டை வெற்றுப் பட்டையாகப் போய்விட்டது. நினைத்தால் தொடர்பு உண்டு. இல்லையென்றால் ஒன்றுமே இல்லையென்றாகி விட்டது. அதுவும் இரவில் கூட இணையத்திற்கு இவ்வளவு தடையா? பலரிடமும் மனு போட்டாகி விட்டது. பலன் தான் இல்லை; இப்போது இதைத் தட்டச்சி வைத்திருந்து எப்போது தொடர்பு கிடைக்கிறதோ அப்போது படியேற்ற வேண்டும். வர வர B.S.N.L. வைத்திருப்பது வேதனையாகி விடுகிறது. எனக்கு இப்போதைக்கு இதை விட்டால் வேறு வழியும் இல்லை.

மணி 12.20

 சரி… மெல்ல போய்… ஆங்கிலத்தில் என்னென்னவோ பேசிக்கொண்டிருப்பார்கள். கேட்க ஆரம்பிக்கிறேன்.

 மணி 2.17 

ஜெர்மனி 5 0 ப்ரேசில் 


 அட போங்கப்பா .. பெரிய சுனாமி ஒண்ணு வந்து எல்லாத்தையும் அடிச்சிட்டி போயிரிச்சி. அப்படித்தான் இருக்கு.

முதல் பத்து நிமிஷம் நல்லாவே இருந்துச்சு. பந்து ப்ரேசில் கை வசமே இருந்தது மாதிரி தோணுச்சு. ஆனால் 11வது நிமிஷத்துல முதல் கவுல். முல்லர் அடித்தது. கார்னர் ஷாட். இலகுவாக அடித்தது போலிருந்தது. இப்போட்டியில் அவரது ஐந்தாவது கோல். தங்கக் காலணி இவருக்குத்தானோ?

இதன் பிறகும் பந்து ப்ரேசிலிடம் தான் அதிகமிருந்தது. திடீரென்று 23 நிமிடத்திலிருந்து 29வது நிமிடம் வரை ஒரு பேரலை … சுனாமி … 4 கவுல்கள் விழுந்தன. ஒரு கோல் விழுந்து ஆட்டம் ஆரம்பித்த பின் மறுபடி ரீ வைண்ட் நடக்குமே .. அது தானே என்று பார்க்கும் போது தான் தெரிந்தது அடுத்ததும் ஒரு கவுல் என்று. இப்படியா அடுத்தடுத்த ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் அடுத்தடுத்த கவுல் விழும்! நினைத்தே பார்க்க முடியாது. உலகக் கோப்பையில் இப்படி ஒரு கவுல் மழையா … அதுவும் ப்ரேசிலுக்கு!

இதை தட்டச்சும் போது நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு போன். என்னப்பா இது … உலகத்திலேயே நாங்க தான் ரொம்ப பெரிய ஆளுங்க அப்டின்னு கத்திக்கிட்டு இருக்குற ஆளுக இப்படி அடிச்சிட்டாங்களேன்னு சொல்லி வருத்தப்பட்டார்.

நல்ல வேளை நெய்மர் பிழைத்துக் கொண்டார்.. அவர் இருந்திருந்தாலும் இப்படித்தான் கவுல் விழுந்திருக்கும். ஆனால் இப்போ நானில்லை அது தான் இப்படின்னு கொஞ்சம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்னு நினைக்கிறேன்.

Defense of Brasil is in complete jitters.

Marcello பந்தை

 சரி… நேரமாச்சு …மறுபடி போய் உட்காருகிறேன். தலைவிதி ……

 ஜெர்மனி 7 - 1 ப்ரேசில் 

மணி 3.35

எல்லாம் போச்சு …. ஆட்டம் முடிஞ்சி ஒரு லெமன் டீ குடிச்சிட்டு அழுறவங்களைக் காண்பிப்பாங்களே அவங்களைப் பாத்துட்டு எழுத உட்கார்ந்தேன்.

என்னத்த எழுதுறது …. இந்தப் போட்டியின் முதல் நாளில் தன் கவுல் – self goal – போட்டாரே அந்த மார்சலோ ஒருவர் மட்டும் முனைந்து ஆடியது போலிருந்தது. வர்ணனையாளர்களும் நல்லாவே ப்ரேசில் காலை வாரினார்கள். ஆட்டக்காரர்கள் நேரே போய் dressing room-க்குப் போய் ஒளிஞ்சிக்கிறது நல்லது என்றார்கள். ஆட்டம் 90 நிமிடம் முடிந்ததும் அதிக நேரம் கொடுக்கவில்லை. நல்லது தான் … இல்லாட்டி இன்னும் பல கோல் ப்ரேசிலுக்கு விழுந்து விடலாம் என்றார்கள்.

அதென்னவோ ஜெர்மனி அடித்த கோல்கள் கவுலானது. ஆனால் ப்ரேசில் அடித்த சில பந்துகளும் நேரே போய் அந்த கவுலர் கைகளுக்குச் சென்றன. 69, 79வது நிமிடங்களில் ஆறாவது, ஏழாவது கோல்கள் விழுந்தன. 94வது நிமிடம் ஆஸ்கர் அடித்த ப்ரேசிலின் ஒரே ஒரு கோல் விழுந்தது.

ஆனால் ஒன்று .. விருவிருப்பான சினிமா போகுமே அது மாதிரி 95 நிமிடங்களும் அப்படி ஒரு விரைவாக ஓடி விட்டன.


* செஸ் ஆட்டத்தில் ஒருவர் தோற்கும் நிலைக்கு வந்ததும் resign செய்வார்களே அதே போல் இந்த விளையாட்டிற்கும் வைத்து விடலாமா?

* ஒரு காலத்தில் ஜே .. ஜே .. என்று இருந்த இந்தியா ஹாக்கியில் கோட்டை விட்டுக் கொண்டே இருப்பது போல் இனி ப்ரேசிலும் ஆகி விடுமோ? எல்லாம் ஒரு BRICS தொடர்புதான்!

* இரண்டு ப்ரேசில் அணி வீரர்கள் விளையாட்டு முடிந்ததும் மண்டி போட்டு ஜெபித்தார்கள். என்னவென்று கடவுளிடம் பேசியிருப்பார்கள் என்று யோசித்தேன்….

மணி  காலை 4.01


 *

3 comments:

வேகநரி said...

//இரண்டு ப்ரேசில் அணி வீரர்கள் விளையாட்டு முடிந்ததும் மண்டி போட்டு ஜெபித்தார்கள். என்னவென்று கடவுளிடம் பேசியிருப்பார்கள் என்று யோசித்தேன்….//

ஜேர்மனி 7 மேலேயும் அடிக்காம விட்டதிற்கும், தாங்க ஒண்ணு அடித்ததிற்கும் கடவுளுக்கு நன்றி சொல்லியிருப்பாங்க.

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி ஐயா

குறும்பன் said...

என் மறுமொழி இன்னும் வரலையே :(

கவுல் அல்ல கவல், Goalkeeper = கவலி. நீங்கள் கால்பந்தில் தமிழ் சொற்களை பயன்படுத்து கண்டு மகிழ்ச்சி. உங்கள் வலைப்பதிவை படிக்கும் பலருக்கும் இச்சொற்கள் சென்று சேரும்.

நீங்க சொன்ன மாதிரி அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம், குழுவாக விளையாடாமல் சிறந்த வீரர் போனால் மொத்த அணியும் ஆட்டம் கண்டு விடும் என்ற நிலை எந்த அணிக்கும் நல்லதல்ல. தனிப்பட்ட வீரர்களை அதிகம் நம்பியதால் பிரேசிலுக்கு ஏற்பட்ட அவமானம் இது என்று கூட சொல்லலாம்.

Post a Comment