Friday, November 07, 2014

799. சில உண்மைகள் - உங்களுக்கு மட்டும் ! வெளியில சொல்லிடாதீங்க ....







*




’அவர்கள் உண்மைகள்’ பதிவர் தனது பதிவில்  படங்களோடு எத்தனை பதிவர்கள் தன் பதிவைப் படிக்கிறார்கள் என்பதைத் தெரிவித்து மற்ற சமுகத் தளங்கள் இணையப் பதிவுகளை புறந்தள்ளி விடவில்லை என்று நிருபித்திருந்தார்.

 அதனைத் தொடர்ந்த வருண் தன் பதிவில் அது எப்படி என் போன்ற “மூத்த” பதிவர்களுக்கு மனச்சோர்வு அளிக்கும் என்று எழுதியிருந்தார்.


இந்த இரு விவாதங்களையும் நீங்கள் விவாதிக்க உங்களுக்கு உண்மையான ‘பிக்சர்’ தெரிய வேண்டுமே ... அதனால் உண்மையான ‘பிக்சரை’ இங்கே தருகிறேன். (யார் வந்து நம் பதிவை எல்லாம் வாசிக்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில் தான் இந்தப் பதிவையே போடுகிறேன்!!)






பதிவர்களை சாதா, பிரபல, மூத்த பிரபல, வெறுமனே மூத்த பதிவர்கள் என்று பிரிக்கலாம்.

இந்தப் பதிவின் moral of the story என்னன்னா ... நான் ஒரு வெறுமனே மூத்த பதிவர் மட்டும் என்பதே ...!






அ.உ. காரருக்கு 42,782  அப்டின்னா வெறுமனே மூத்த பதிவருக்கு  6490

அ.உ. காரருக்கு 3402  அப்டின்னா வெ.மூபதிவருக்கு 167.

பதிவர்கள் எல்லோருக்காகவும் வைத்த பதிவுகள் கூட 484 பேர் தான் வாசித்திருகிறார்கள் என்பது ஒரு சோகம் தான்!

இத வாசிக்கிற நாலஞ்சு பேரும் இத ரகசியமா வச்சுக்கங்க ... வெளியில் சொல்லிக்கிட்டு திரிய வேணாம்.  சரியா ?

எனக்கு இன்னொரு சந்தேகம் ...

எனக்கு வாசிக்க வர்ரவங்க இம்புட்டு குறைச்சலா இருந்தும் எப்படி தமிழ்மண traffic rankல் 47 வது rankல் என் பதிவு வரும்?


*



14 comments:

ப.கந்தசாமி said...

எனக்கு ஒரு சந்தேகம்? இதையெல்லாம் எந்த ஓட்டல்ல ரூம் போட்டு யோசிப்பீங்க?

Rathna said...

/எனக்கு வாசிக்க வர்ரவங்க இம்புட்டு குறைச்சலா இருந்தும் எப்படி தமிழ்மண traffic rankல் 47 வது rankல் என் பதிவு வரும்?/........super....!!

G.M Balasubramaniam said...

யார் வருகை தந்தாலும் தராவிட்டாலும் எம் பணி எழுதுவதே. வாசிக்காமல் போனால் அவர்கள் நஷ்டம் என்றே எண்ணுகிறேன் அரிய விஷயங்களை அறியாமல் போவது அவர்களுக்கல்லவா இழப்பு.

கரந்தை ஜெயக்குமார் said...

/// (யார் வந்து நம் பதிவை எல்லாம் வாசிக்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில் தான் இந்தப் பதிவையே போடுகிறேன்!!)///
நான் வந்து வாசித்துவிட்டேன் ஐயா
வருகை தந்தோர் எண்ணிக்கையைப் பற்றி ஏன் கவலைப் பட வேண்டும் ஐயா

எழுதுவோம், எழுதுவோம், எழுதுவோம்

”தளிர் சுரேஷ்” said...

என்னங்க இது ரகசியதை இப்படியா போட்டு உடைப்பீங்க?

வருண் said...

It is always good to reveal fact-filled REALITY, dharumi Sir! :-) MT's data reveals some exceptional cases. My speculation is nothing but "speculation". But your post shows the reality and what is practical in blog world! Thanks :)

Sorry my Tamil fonts did not work this morning. I did not have enough patience to shut down and re-start and post this comment. :)

நிர்வாகி (Admin) said...


எந்தா சாரே,
இந்த chart, data எல்லாம் லுலுப்பா, தமாசு, etc.,
உங்கள் பதிவுகளைப் படிப்பவர்கள் இன்னும் அதிகம். என்னை மாதிரி feeders பயன்படுத்துவார்கள், crawlers பயன்படுத்துவர்களை எல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பார்கள் இந்த charters?

நீங்க நினைச்சுகிட்டு இருக்கறதைவிட நீங்க பெரிய ஆளு, ஆமா. நெசமாத்தான் சொல்லறேன்.
இதுல எல்லாம் நேரத்தையும் எண்ணத்தையும் "கரியாக்காம" எப்பவும் போல அடிச்சு ஆடுங்க வாத்தியாரே.

Anonymous said...

கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை.
இனியும் எழுதுங்கள் தருமி.

Avargal Unmaigal said...

சார் வருகிற ஹிட்டை ஒப்பிட்டு பாக்காதீங்க..... எழுத்தின் தரத்தை அதில் உள்ள கருத்தை சிந்தனையை பாருங்கள் உங்கள் எழுத்துக்கள் இமயம் போன்று உயர்ந்து நிற்கிறது எனது எழுத்துக்கள் அப்படி அல்ல அதுமட்டுமல்ல உங்களது பதிவுகள் பொக்கிஷம் ஆனால் எனது பதிவுகள் ஜஸ்ட் டைம்பாஸ் அவ்வளவுதான். நான் எழுதுவது எனது பொழுது போக்க்கிற்காக மட்டுமே.

Avargal Unmaigal said...

நீங்க காசி காலத்து பதிவர்தான் ஆனால் இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழ்மணம் அதன் ரேங்க் பற்றி கிணற்று தவளை போல தமிழ்மணத்தை பற்றி பேசிக் கொன்டிருக்கப் போகிறீர்கள் தமிழ் மணம் ஒரு வலை திரட்டிதான் நீங்கள் அதன் ரேங்குக்காக எழுதி கொண்டிருக்கப் போகிறீர்களா என்ன

திண்டுக்கல் தனபாலன் said...

எதுவும் கடந்து போகும்... ஹிஹி...

தொடர்ந்து எழுதுங்க சார்... இதெல்லாம் கண்டுகாதீங்க...

KILLERGEE Devakottai said...

வராதவர்களுக்கே நஷ்டம் எழுதுங்கள் ஐயா.

வெங்கட் நாகராஜ் said...

ஹிட்ஸ் பற்றிய கவலை வேண்டாம்.....

எழுதுவது உங்கள் மனத் திருப்திக்கு மட்டும் தான்..... தொடர்ந்து எழுதுங்கள்.

சார்லஸ் said...

தருமி சார்

உங்களைப் போன்றோரைப் பார்த்துதான் என்னைப் போன்றவர்கள் எழுதவே வருகிறோம் . நீங்கள் வாசகர்களை உருவாக்குபவர் அல்ல . பதிவர்களை உருவாக்குபவர் . யார் ரசித்தாலும் வெறுத்தாலும் நிலவு தன் குளுமையை கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது .

Post a Comment