Thursday, January 15, 2015

816. எஸ். ரா. வாங்கிய புத்தகங்கள்






*



தி இந்து - ஜனவரி 14, 2015

 வாசகர் திருவிழா - 2015 

 நான் என்னென்ன வாங்கினேன்? -- எஸ். ராமகிருஷ்ணன் 


 நமது ஆளுமையை, அழகுத்திறனை, அனுபவத்தை மேம்படுத்திக் கொள்ள எளிய, சிறந்த வழி புத்தகங்களே. ‘உனது நண்பன் யாரென்று சொல்; உன்னைப் பற்றி நான் கூறுகிறேன்’ என்றொரு பொதுமொழியிருக்கிறது. இதற்கு மாறாக, நீ என்ன புத்தகம் படித்திருக்கிறாய் என்று சொல்; உன்னைப் பற்றி நான் கூறுகிறேன் என நான் சொல்வேன்.

வேறு எந்த உயிரினமும் தனது அறிவை, அனுபவத்தைச் சேகரித்து இன்னொரு உயிரினத்துக்குப் பரிசாகத் தருவதில்லை. மனிதன் மட்டுமே செய்கிறான்.

புத்தகச் சந்தையில் ஒவ்வொரு நாளும் புத்தகங்களை அள்ளிச் செல்வது என்னுடைய இயல்பு.

இன்றைக்கு வாங்கிய புத்தகங்களில் முக்கியமானவை: --

ரே பிராட்பரி எழுதிய “பார்ன்ஹீட் 451
வண்ணதாசனின் “சின்ன விஷயங்களின் மனிதன்”
ஜெ.ட். சாலின்ஜர் எழுதிய “குழந்தைகளின் ரட்சகன்”
சார்லஸ் ஆலன் எழுதிய “பேரரசன் அசோகன்”
”டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை”
“தி.க.சியின் நாட்குறிப்புகள்





 *

4 comments:

நம்பள்கி said...

816. எஸ். ரா. வாங்கிய புத்தகங்கள்
தருமி | அசோகர்

உங்க இடுகை லேபிளில் "அசோகர்" என்று இருந்தது; அதனால் ஒரு கேள்வி!

"அசோகர் உங்க மகரா?"

பின்குறிப்பு:
கா.நேரமில்லை--பாலையா பேசும் பெஸ்ட் வசனம்!

தருமி said...

ஆம் ... தத்து ’மகர்’.

க்ளிக்கிப் பாருங்களேன்!

G.M Balasubramaniam said...

எஸ்.ரா வாங்கியதால் உங்கள் மவுசு கூடுகிறதா, இல்லை உங்கள் புத்தகம் வாங்கியதால் அவர் மவுசு கூடுகிறதா. சுட்டியின் பின்னூட்டங்களைப் பார்க்கும் போது a virtual war of words நடந்திருப்பதை அறிய முடிகிறது. வாழ்த்துக்கள்.

தருமி said...

ஜி.எம்.பி,
அசோகரின் மவுசு கூடுகிறது ........

Post a Comment