Tuesday, March 10, 2015

825. INDIA'S DAUGHTER





*



INDIA'S DAUGHTER - Leslee Udwin எடுத்த, B.B.C.யில் வெளியான செய்திப் படத்தைப் பார்த்தேன். நல்ல தொகுப்பு. ’ஜோதி’ என்ற அந்தப் பாவப்பட்ட, கற்பழிக்கப்பட்ட  பெண்ணின் தந்தையும், தாயும் தரும் செய்திகளும், ஏனைய செய்தித் தொகுப்புகளும் கரிசனையோடு படமெடுக்கப்பட்டுள்ளன. நல்ல முனைப்போடும், திறந்த மனத்தோடும் எடுக்கப்பட்ட ஆவணத் தொகுப்பு. இதை ஏன் தடை செய்ய வேண்டும் என்பதற்கான காரணம் என்ன என்றே தெரியவில்லை.


படிக்காத தற்குறித்தனமான முகேஷ் என்ற ஒரு குற்றவாளியின் வாக்குமூலம் ஒன்று உள்ளது. அதற்காகத்தான் இந்த தடை என்று செய்திகளில் படித்ததாக நினைவு. அவனைப் பொறுத்த வரை அவனும் அவன் சமூகமும் பெண்களுக்குத் தரும் கேவலமான ஒரு நிலையை அவன் தன் வாக்குமூலத்தில் நிலை நிறுத்துகிறான். பெண்ணுக்கென்று சுதந்திரம் ஏதும் இல்லை. ஆண் படு என்று சொன்னால் பெண் உடனே படுக்க வேண்டும் என்ற கருத்தியலில் வாழ்ந்தவன். அதுதான் அவனது வாக்குமூலத்தில் வருகிறது. அவனைக் குறை சொல்லி என்ன பயன். அவன் வாழ்ந்து வரும் வாழ்க்கை அப்படி.


ஆனால் படித்து, பட்டம் பெற்று குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக இந்த வழக்குகளை நடத்திய இரு கபோதியான வழக்கறிஞர்களை என்னவென்று சொல்வது? real f***** lawyers. அவர்கள் தத்துவங்களையும், விவாதங்களையும் கேட்ட போது, குற்றவாளிகளுக்கு முன் இவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. முட்டாள்தனமான படித்த கேடு கெட்டவர்கள்.




one of the two FILTHY lawyers


http://time.com/3735004/indias-daughter-rape-documentary-lawyers-bar-council-action/

இந்த மாதிரி படித்த, கற்றறிந்த ஆண் அயோக்கியர்கள் இருக்கும் வரை கற்பாவது ....   மண்ணாவது ....! 

 *

TOLERANCES FOR A BRUTALITY IS MORE THAN THE BRUTALITY  .... MERYL STREEP



https://www.youtube.com/watch?v=dWwM3j6sx28
https://www.youtube.com/watch?v=cShXikihcEw&spfreload=10
https://www.youtube.com/watch?v=EtLm0OuLDLo&spfreload=10
NIRBHAYA . A PLAY ---  https://www.youtube.com/watch?v=H84EzHvVlOo&spfreload=10

*


8 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...


இந்த மாதிரி ஆண் அயோக்கியர்கள் இருக்கும் வரை கற்பாவது .... மண்ணாவது ....!

G.M Balasubramaniam said...
This comment has been removed by a blog administrator.
துளசி கோபால் said...

எனக்கும் படிச்ச 'இவுங்க' சொன்னதுதான் ஏகத்துக்கும் கடுப்பு.

ஆம்பளைப்புள்ளைங்களைத் தலைக்குமேல் வச்சுக்கிட்டு , ஆம்பளைன்னா அப்படித்தான் இருப்பான்னு சொல்லி ஆட்டம் போட்ட பொம்பளைங்களைச் சொல்லணும், நல்லபடியா வளர்ப்பு இருக்கட்டுமுன்னு:(

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

படித்தவர்கள் செய்யும் தவறுகளைப் பல நிலைகளில் கணக்கில் எடுத்துக்கொள்ள தவறிவிடுகிறோம் என்பது முற்றிலும் உண்மை.

கரந்தை ஜெயக்குமார் said...

வழக்கறிஞருக்குத்தான் முதலில் தண்டனை அளிக்க வேண்டும்

தருமி said...


TOLERANCES FOR A BRUTALITY IS MORE THAN THE BRUTALITY .... MERYL STREEP

ஜோதிஜி said...

வட மாநில அரசியல் முதல் அங்குள்ள வாழ்க்கைத்தரம், அவர்கள் பார்வை எல்லாமே 1947 தான்.

சார்லஸ் said...

சார்

ஏகப்பட்ட பொறுக்கிப் பசங்க இருகின்ற நம்ம நாட்டில் படிச்ச பொறுக்கி படிக்காத பொறுக்கி என்று ஏன் தரம் பிரிக்கவேண்டும் . இரண்டு பேரும் வார்த்தையாடல்களிலியே பாலியல் வன்முறை செய்திருக்கிறார்கள் .

Post a Comment