Thursday, October 20, 2016

912. மதங்களும் ... சில விவாதங்களும் -- நூலாய்வு







*

K.V. KRISHNASWAMI writes ....

வணக்கம்.

சென்னை ராயபேட்டையில் நடந்த புத்தக கண்காட்சியில் தங்கள் புத்தகத்தை அதன் தலைப்பை கண்டவுடன் உடனே வாங்கவேண்டும் என்கிற அவா தோன்றியது. காரணம், நான் சாதி-மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்கிற தீவிர கொள்கையுடையவன். 1982ல் "இந்திய தேசிய சமதர்ம சங்கம்" என்கிற பெயரில் ஒரு சமூதாய இயக்கத்தை நடத்தி வந்தேன். ஆனால் நான் எதிர்ப்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இன்றைய மக்கள் சினிமாவையும் அரசியலையும் தானே விரும்புகிறார்கள் என்பதால் பிறகு அதையே ஹிந்துஸ்தான் தேசிய கட்சி என்று அரசியல் கட்சியாக பதிவு செய்து மிக எளிய முறையில் சேவை மனப்பான்மையுடன் முன்னேற்ற பாடுபட்டு கொண்டிருக்கிறேன். எனவே இது சம்பந்தமாக அரசியல் ரீதியாக அறிவை வளர்த்துக்கொள்ள புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.

தங்கள் புத்தகத்தை வாங்கி புத்தக stallஐ விட்டு வெளியேரும்போதே புத்தகத்தை விரித்தபோது தருமி என்கிற புனைபெயரில் G.Sam George எழுதியிருக்கிறாரே? இவர் கிருத்துவத்தை போற்றித்தானே எழுதியிருப்பார் என்று துணுக்குற்றேன். பிறகு பேருந்தில் அமர்ந்தவுடன் என்னதான் எழுதியிருக்கிறார் பார்க்கலாமே என்று புத்தகத்தை புரட்டி முன்னுரையின் இரண்டாம் பத்தி கண்ணில் பட்டவுடன் என் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டு மொத்தமும் ஒரே மூச்சில் படித்தபின் முதலில் ஏற்பட்ட தவறான எண்ணத்திற்கு உளமார வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொண்டுவிட்டேன். 

தங்களின் புத்தகத்தில் உள்ளது அத்தனையும் பெரும் மதிப்புக்குரிய செய்திகள். இதை ஊன்றி படித்தவர்கள் கண்டிப்பாக சாதி மதத்தைப்பற்றி யோசிக்க தூண்டப்படுவார்கள். யார் மனதையும் புண் படுத்தாமல் , எந்த மதத்தையும் குறைகூறாமல் மிக அழகாக வேதங்களில் உள்ள ஓட்டைகளை வெளிபடுத்தி மதங்களைப் பற்றி சிந்திக்க வைக்கிறது தங்கள் புத்தகம். நன்றி.

தங்கள் சேவை மேலும் தொடர வேண்டுகிறேன்.


 தங்கள்,

 K.V.Krishnaswami.
 Jan 25, 16





 *

3 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

விமர்சனப் பகிர்வுக்கு நன்றி.

சந்திரசேகர்.ஜே.கே said...

இந்த புத்தகத்தை எழுதிவிட்டு....சில மத வெகுபிரியர்களால் தருமி அவர்களின் மனம் புண்பட்ட வேதனையும் உண்டு...

வேகநரி said...

//G.Sam George எழுதியிருக்கிறாரே? இவர் கிருத்துவத்தை போற்றித்தானே எழுதியிருப்பார் என்று துணுக்குற்றேன்.//
அப்படி கிருஸ்ணசுவாமி அவர்கள் நினைத்ததில் தப்பில்லை. ஆனால் எழுதியவர் தான் உண்மையான பகுத்தறிவாளராக இருக்கிறாரோ.

Post a Comment