Monday, September 03, 2012

589. THE GNOSTIC GOSPELS ... 5

*
*

*

THE GNOSTIC GOSPELS



மற்ற  பதிவுகள்: 

.....................   முதல் பதிவு
.....................   இரண்டாம் பதிவு 
.....................   மூன்றாம் பதிவு  
 ...................     நான்காம் பதிவு 
....................    ஐந்தாம் பதிவு 
....................   ஆறாம் பதிவு
....................    இறுதிப் பதிவு 



IV

THE PASSION OF CHRIST AND 
THE PERSECUTION OF
CHRISTIANS



ரோமானிய போன்டியஸ் பைலாத்துவின் உத்தரவின் பேரில் ஏசு சிலுவையில் அறைந்து, தண்டிக்கப்பட்டார் என்பதுவே நாசரேத்துவின் ஏசுவைப் பற்றிக் கூறப்படும் அனைத்திற்கும் ஒரே சாட்சியாகவும், நிரூபணமாகவும் இருக்கிறது.  கி.பி. 55-115 ஆண்டுகளில் இருந்த வரலாற்றாசிரியர் டாசிட்டஸ் (Tacitus) ஏசுவைப் பற்றி ஏதும் கூறாமல் நீரோ சக்கரவர்த்தி (கி.பி.54-58) ரோமில் பல இடங்களைத் தீக்கிறையாக்கியதைப் பற்றிக் கூறுகிறார். இதனோடு இணைந்து,  ஏசுவிற்கு போன்டியஸ் பைலாத்துவின் தண்டனை பற்றிக் கூறுகிறார்.(70)

ஏசுவின் அடியார்களும் இதனை உறுதிப்படுத்துகின்றனர்.  முதலில் எழுதப்பட்ட மார்க்கின் விவிலியத்தில் (கி.பி.70-80) யூதாசினால் ஏசு காட்டிக்கொடுக்கப் படுவது, ஏசு கைது செய்ய்ப்படுவது, அவரது சீடர்கள் தப்பி ஒளிவது, அரசை எதிர்க்கிறார் எனக் குற்றம் சாட்டப்படு, போன்டியஸால் சாவிற்குத் தீர்ப்பிற்குள்ளாக்கப்படுவதல் - இவை எல்லாமே கூறப்பட்டுள்ளன.

லூக், யோவான் இருவரும் இன்னும் பல ஆண்டுகள் கழித்தே, ஏறத்தாழ ஒரு தலைமுறை கழித்த பின் (90-110) இச்சம்பவத்தை இன்னும் பல வீர தீரச் செயல்களோடு எழுதியுள்ளனர். ஏசு தன் எதிரிகளை மன்னித்தல், ஜெபம் செய்தல் போன்றவைகள் இதில் உண்டு. ஆனால் நான்கு புதிய ஏற்பாடுகளிலும் அவரது வேதனை மிகுந்த சாவு, அவசரமாக அவர் புதைக்கப்படுதல் போன்றவை கூறப்பட்டுள்ளன.  (71)

Apocalypse of Peter  என்ற Nag Hammadi ஏடுகளில் வேறுவிதமாகக் காணலாம்.  சிலுவையில் அறையப்பட கைகளிலும் கால்களிலும் ஆணிகள் அறையப்படும் ஒருவரையும், சிலுவையில் மகிழ்ச்சியாகவும் சிரித்துக் கொண்டும் ஒருவர் இருப்பதைப் பார்த்து, ஏசுவிடம் கேட்டேன்.  அவர் சிலுவையில் சிரித்துக் கொண்டிருப்பவர்  LIVING JESUS . கீழே  ஆணி அறையப்படுபவர்  ஏசுவின்  சதையாலான உருவம்(FLESHY PART); அவரின்  மாற்றுடல்.  (HIS SUBSTITUE ) என்றார். (72)

The Acts of John - நாக் ஹமாதி பிரதிகள் கிடைப்பதற்கு முன்பே கிடைக்கப்பட்ட பிரதி இது.  இதில் ஏசு ஒரு மனிதனல்ல; அவர் ஓர் ஆன்மீக உருவு  என்று கூறப்பட்டுள்ளது. (73)

The Acts of John-ல் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடல்:

இப்பிரபஞ்சம் முழுமையும் அந்த நடனக்காரரின் சொத்து.   ஆமென்.

நடனமாட முடியாதவனுக்கு நடப்பது என்ன என்பது புரியாது.   ஆமென்.

இப்போது என்னோடு நடனமிட ஆரம்பித்தால், உன்னை என்னிடம் காண்பாய்.   ஆமென்.

நடனமிடும் நீ, நான் என்ன செய்கிறேன் எனபதைக் கவனி ; நான் படும் இன்னல்கள் உனக்காக;    ஆமென்.

துயரங்களை அனுபவிக்கப் பழகு; அப்படியானால் நீ துயரமின்றி இருப்பாய்.      ஆமென். (74)


பழமைக் கிறித்துவர்கள் ஏசு ஒரு மனிதனாகவே பூவுலகிற்கு வந்தார் என்பதில் உறுதியாக உள்ளார்கள்.
Pope Leo, the Great (கி.பி.442) The Acts of John-ல் சொல்லியிருப்பது முற்றிலும் தவறு; அது போன்ற எழுத்துக்கள் அழிக்கப்பட்டு, எரிக்கப்பட வேண்டும் என்கிறார். (75)

Suectonius என்ற வரலாற்றாசிரியர் (கி.பி.125) நீரோ சக்கரவர்த்தியின் காலத்தில் கிறித்துவர்கள் பெருமளவில் தண்டிக்கப்பட்டுள்ளதைக் கூறுகிறார். (76)


(இதனைத் தொடர்ந்து எப்படி பல கிறித்துவர்கள் ரோமானியப் பேரரசால் கொல்லப்பட்டார்கள் என்று நூல் சொல்லிச் செல்கிறது. சில மணி நேரத் துயரங்கள் மூலம் அவர்கள் பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு மோட்சம் செல்லும் வேதசாட்சிகளாகி விடுகிறார்கள் என்பது பழமைக் கிறித்துவத்தின் நம்பிக்கை.)





V

WHOSE CHURCH IS THE 

"TRUE CHURCH"?



கடந்த இரண்டாயிரம் ஆண்டளவாக பழமைக் கிறித்துவக் கருத்துக்களும், வழி முறைகளும் காக்கப்பட்டு, போற்றப்பட்டு வருகின்றன;  gnostic கருத்துக்கள் பின் தள்ளப்பட்டு விட்டன; அதை விடவும் அவைகள் ஏறத்தாழ அழிக்கப்பட்டு விட்டன. Nag Hammadi  பதிவுகள் கிடைத்த பிறகே மதத்தின் இன்னொரு பக்கம் வெளி வந்துள்ளது.  பழமைக் கிறித்துவம் gnosticகருத்துக்களால் கண்டிக்கப்பட்டு வந்துள்ளது என்பதும் தெரிகிறது.  (102)

கி.பி. 200 பழமைக் கிறித்துவத்திற்கும்,  gnostic கருத்துக்களுக்கும் போராட்டம் ஆரம்பமாகி இருந்தது.  எந்த அமைப்பு உண்மையான கிறித்துவம் என்ற போராட்டம் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

gnostic மதம் வெறும் அடையாளங்கள், வேத சாட்சிகளாக மரித்தல் போன்றவைகளைப் போற்றவில்லை. அவர்களது அடிப்படைக் கருத்து: ‘உங்கள் கனிகள் மூலம் நீங்கள் அறியப்படுவீர்கள்’.

ஆனால்  பழமைக் கிறித்துவம் இரண்டாம் நூற்றாண்டிலேயே ஒரு முழு அமைப்பாக மாற ஆரம்பித்து விட்டது. அக்கிறித்துவம் சொல்பவைகளை முழுமையாக நம்புபவர்கள் மட்டுமே  கிறித்துவர்களாக அங்கீக்ரிக்கப்பட்டனர். அறிவு சார் கொள்கைகள் புறந்தள்ளப்பட்டு, எளிய, சாதாரண முறைகளில், அதன் கொள்கைகள், பழக்கங்கள், அரசியல் அமைப்புகள் இவைகளை ஒப்புக் கொள்வோர் மட்டுமே உறுப்பினர்கள் என்ற கட்டமைப்பு உருவானது. (104)

பழமைக் கிறித்துவத்தில் கத்தோலிக்க திருச்சபை மட்டுமே முழுமையானது; இதற்கு வெளியே ரட்சிப்பில்லை.  gnostic கிறித்துவத்திலோ மதக் குருக்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் ஒருவருக்கொருவர் கொள்ளும் நல்லுறவே முக்கியம் என்று சொன்னது. உண்மையான கிறித்துவம் என்பது கடவுளோடும் மற்றவர்களோடும் நாம் கொள்ளும் நல்ல உறவு மட்டுமே என்றது.    gnostic கிறித்துவம்  ’தெய்வீக கிறித்துவம்’ என்பது பற்றிப் பேசும்போது, பழமைக் கிறித்துவம் வெளிப்படையான, சாதாரண தோற்றத்தை மட்டுமே தருகிறது.  (106)

Irenaeus-ன் மாணவரான Hippolytus கிறித்துவ சட்டத்தின்படி மதத்தலைவர்களான பிஷப்புகளின் இருப்பைப் பிரதானப்படுத்துகிறார். (107)

Valentinian-களில் ஒருவரான Heracleon மாற்றுக் கருத்தைக் கூறுகிறார். ’சாதாரண’ பழமைக் கிறித்துவர்களுக்கு கோவில் என்பது  சாதாரணம்;  ஆனால்  gnostic கிறித்துவர்களுக்கு அது ஒரு புனித இடம்; ஆன்மீகம் சார்ந்த இடம் என்றாகி விடுகிறது என்கிறார். (116)





















*

6 comments:

சார்வாகன் said...

வணக்கம் அய்யா,

இப்புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்.ஒவ்வொரு ம‌தமும் அதன் தோற்றத்தில் இருந்து மாற்றங்களின் ஊடாக கிளைத்து தழைத்தே இந்நிலைக்கு வந்தது என்பதும்,மதம் பயணித்த பாதை மதவாதிகளால் மறுக்கப்படும் என்னும் உன்மையையும் இப்பதிவு விள்க்குகிறது.

மதத்தின் தோற்றம் கூட அது இன்னொரு கிளையின் கிளை என்பதே உண்மை.

இயேசு பற்றிய பழமையான வரலாற்று சான்றுகளும்,கருத்தாக்கங்களும் ஒன்றுக் கொன்று மாறுபடுவது வியப்பில்லை. ஒரு கருத்து வலுப்பெற்றதும்,மாற்றுக் கருத்துகளை அழித்தொழிப்பதுமே மதத்தின் வரலாறு!!!.

இது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும்!!!!

நன்றி

வேகநரி said...

எனக்கு தெரிந்து பழமைக் கிறித்துவக் கருத்துக்களும் வழி முறைகளும் முக்கியமாக காக்கப்பட்டு போற்றப்பட்டு வருகின்றன யாரால் என்றால் ஆசிய ஆபிரிக்க அரபியர்கள் கிறித்துவ மதத்திற்க்கு மாறியவர்களால் தான். நான் இந்த யேசுவின் ஆட்களிடம் தமிழ் தெரியும் என்று சொன்னதால் பேருந்துவில் பட்ட அனுபவம் வெறுத்து போய்விட்டது. தம்பி நீர் உம்மை முழுமையாக யேசுவிடம் ஒப்புவியும் நீர் எங்கேயோ போய்விடுவிடுவீர் என்று அறுத்த அறுவைகள் தாங்க முடியாது. அவர்கள் இலங்கை தமிழர்களாம்.

தருமி said...

சார்வாகன்,

thanks for bringing out the main point of this post.

Unknown said...

அய்யா வணக்கம்,

இன்றைய அரசியல் கட்சி போலத்தான் அன்றைய மதங்களும் கிளைத்திருக்கக் கூடும். ஒரு கட்டத்தில் கிளைத்துக் கிளைத்து களைத்துப் போய் மதத் தோற்றம் நின்றுவிட்டதோ??? இந்த முடிவு கட்சிகளுக்கும் வரவேண்டும். நல்ல பதிவு நன்றி அய்யா.

இனியவன்....

DEVAPRIYA said...

மேலும் ஒரு நல்ல பதிவு.

மத வளர்ச்சி பெற மத ஒருங்கிணைப்பு என்பது மிக முக்கியம், வேறொரு பழைய மதக் கருத்தை ஏற்று மாற்றி புதிய மதங்கள் வருகின்றன. இது Syncretism எனப்படும்.

யூத சமயமே பல மதக் குவியல் பொ.மு. 300 - 100 உருவானது தான்.

சார்வாகன் அவர்கள் நல்ல பைபிளியல் நூல்கள் படிக்க இணைப்பு
http://www.mediafire.com/view/?ycs4khdk001f8rm
http://www.mediafire.com/view/?20y0925a1kkbnyy
http://www.mediafire.com/view/?y177tc2oa3tegam
http://www.mediafire.com/view/?wu8iqkxeus2b6by

சார்வாகன் said...

மிக்க நன்றி சகோ தேவப்பிரியா,

தரவிறக்கம் செய்து விட்டேன்!!

மீண்டும் நன்றி!!!!!!!!!!!!!

Post a Comment